Skip to main content
"பிறர் சாத்தியமில்லை என்று சொன்னாலும்கூட முயற்சி செய்யுங்கள்"
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

இளையர் குரல் செய்தியில் மட்டும்

"பிறர் சாத்தியமில்லை என்று சொன்னாலும்கூட முயற்சி செய்யுங்கள்" - சிண்டா உன்னத விருது வென்ற இளையர்

வாசிப்புநேரம் -
நாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு STEM எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகியவற்றை உள்ளடக்கிய கல்வித் திட்டம் சிறந்த தீர்வளிக்கும் என்கிறார் சிண்டா உன்னத விருது பெற்ற ஜோய் மெர்வின் (Joy Mervin).

ஆங்கிலோ-சீன சுயேச்சைப் பள்ளியில் பயிலும் அவர் எதிர்காலத்தில் STEM தொடர்பிலான வேலை செய்யவேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகச் 'செய்தி'யிடம் தெரிவித்தார்.

ஜோய் அது தொடர்பாக சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகம் (NUS), A*STAR ஆய்வு அமைப்பு ஆகியவற்றில் பல்வேறு ஆராய்ச்சிகளை நடத்தியதோடு மட்டுமல்லாமல் பல்வேறு போட்டிகளிலும் கலந்துகொண்டு விருதுகளை வென்றிருக்கிறார்.

இளம் வயதிலேயே பல வெற்றிகளைக் கண்ட அவருக்கு உத்வேகம் அளித்தது எது? 'செய்தி' கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில்...

"எனது பெற்றோர் என்னைப் படிக்கவேண்டும் என்று ஒருபோதும் கட்டாயப்படுத்தியதில்லை. கற்றலை ஒரு சுவாரசியமான அனுபவமாகப் பார்க்க ஆரம்பித்தேன். இதுவே கல்வி மீது வருணிக்க முடியாத பிரியத்தை ஏற்படுத்தியது. பாடத்திட்டத்திற்கு அப்பார்ப்பட்ட தலைப்புகளைப் பற்றி ஆராய்ந்தேன்," என்றார் ஜோய்.

சிண்டா உன்னத விருது பெற்றபோது தொடர்ந்து சிறப்பாகச் செய்யவேண்டும் என்ற உற்சாகம் கிடைத்ததாக அவர் பகிர்ந்தார்.

"பெரிய கனவு காணுங்கள். பிறர் சாத்தியமில்லை என்று சொன்னாலும்கூட முயற்சி செய்யுங்கள்! தோல்வி கண்டாலும் அதிலிருந்து பலவற்றைக் கற்றுக்கொள்ளலாம்!" என்கிறார் ஜோய்.
ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்