Skip to main content
தீபாவளிக்குப் புத்தாடை வாங்க மூத்தோருக்கு உதவிய இளையர்கள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

இளையர் குரல்

தீபாவளிக்குப் புத்தாடை வாங்க மூத்தோருக்கு உதவிய இளையர்கள்

வாசிப்புநேரம் -
தீபாவளி என்றாலே புத்தாடைதான்.

வசதிகுறைந்த மூத்தோர் புத்தாடை வாங்கிக்கொள்ள சிண்டாகவும் சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தின் தமிழ்மொழிச் சங்கமும் சேர்ந்து ஒரு நிகழ்ச்சியை நடத்தின.

அக்டோபர் 11ஆம் தேதி காலை 11 மணிக்கு தேக்கா நிலையத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது.
படம்: ஷ்ரேயா
நிகழ்ச்சியின் நோக்கம்? இளையர்கள் மூத்தோர் ஒவ்வொருவருக்கும் 100 வெள்ளிக்குள் புத்தாடை வாங்கித்தரவேண்டும்.

34 பல்கலைக்கழக மாணவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

மூத்தோர் நாட்டிற்காக அரும்பாடுபட்டவர்கள்; இப்போது சிரமங்களை மறந்து அவர்கள் ஓய்வெடுக்கலாம் என்று சிண்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசு ராஜேந்திரன் கூறினார்.
படம்: ஷ்ரேயா
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஹமிது ரசாக் சமூகத்தினர் அனைவரும் ஒன்றுசேர்ந்து செயல்பட்டால்தான் நாட்டின் வெற்றியை உறுதிசெய்யமுடியும் என்றார். குறிப்பாக மூத்தோரையும் இளையர்களையும் கவனித்துக்கொண்டால் நாடு செழிக்கும் என்று வலியுறுத்தினார். ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருக்கும் ஒளி அனைவரும் ஒன்றிணையும்போது இன்னும் அதிகப் பிரகாசத்தைத் தரும் என்றும் அவர் கூறினார்.
படம்: ஷ்ரேயா
பல்கலைக்கழக மாணவர்களைத் தவிர வெஸ்ட்வுட் (Westwood) தொடக்கப்பள்ளி மாணவர்களும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அவர்கள் கோலாட்டப் படைப்பை அரங்கேற்றி மூத்தோருக்குத் தீபாவளி அன்பளிப்புப் பைகளை வழங்கினர்.

தீபாவளியை ஒட்டி சமூகத்துக்குப் பங்களிக்க இது ஒரு நல்ல வாய்ப்பு என்று மாணவர்கள் கூறினர்.
ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்