Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

இளையர் குரல் செய்தியில் மட்டும்

மனம் இருந்தால் வானமே எல்லை - வெற்றிகரமாக எவரெஸ்ட் அடிவாரம் ஏறிய இளையர்

வாசிப்புநேரம் -
சிந்துஜா நாயர்...

கலைகளில் ஆர்வம் மிகுந்தவர்.

'Bhangra' நடனக்கலையில் தேர்ச்சி பெற்றவர்.

கலைகளைத் தவிர்த்து வேறு எதிலும் பெரிய நாட்டமில்லாமல் இருந்தவர்.

இன்று எவரெஸ்ட் அடிவாரத்தைத் தொட்டிருக்கிறார்.

வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்புமுனை பற்றி 'செய்தி'யிடம் பகிர்ந்துகொண்டார் சிந்துஜா.

"எனது மாமா முரளி ஐயங்கார் (Murali Ayengar) தான் எனக்கு முன்மாதிரி. ஆரோக்கியமான வாழ்க்கைமுறையின் முக்கியத்துவத்தை அவர் கற்றுத்தந்தார். அதிலும் குறிப்பாக மலையேறுவதில் ஒரு துளி கூட ஆர்வம் இல்லாத எனக்கு மலையேறுவதில் ஆர்வம் ஏற்படுவதற்கு அவர் முக்கியக் காரணமாக இருந்தார்,"

சிந்துஜா 2016ஆம் ஆண்டில் முதன்முதலாக Mt. Ophir மலையை ஏறினார்.

பயிற்சி அதிகமில்லை, அனுபவம் சவாலாக அமைந்தது; பாதி வழியில் முயற்சியைக் கைவிட நினைத்திருக்கிறார்.

"இருந்தபோதிலும் அந்த அனுபவம் மலையேறுவதில் இருந்த ஆர்வத்தைச் சற்றும் குறைக்கவில்லை. சொல்லப்போனால் அதிகரித்தது. மலையேறுவதில் அதிக கவனம் செலுத்தினேன். அதற்குத் தேவையான பயிற்சிகளைச் செய்தேன்,"

2022ஆம் ஆண்டில் எதிர்பாராத் திருப்பம்....

சிந்துஜாவிற்கு முன்மாதிரியாக இருந்த அவரது மாமா ஒரு விபத்தில் காலமானார்.

அவரை நினைவுகூரும் வகையில் சிந்துஜா 21 வயதில் எவரெஸ்ட் அடிவாரத்தை வெற்றிகரமாக ஏறி முடித்தார்.

"எவரெஸ்ட் அடிவாரம் வரை ஏற முடியாது என்று சிலர் என்னிடம் கூறினர். அதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டேன். படிப்பு, முழுநேர வேலை, மலையேறுவதற்கான பயற்சி அனைத்தையும் சமாளித்தேன். கடுங்குளிரைப் பொறுத்துக்கொண்டு மறைந்த மாமாவின் கனவை நிறைவேற்றினேன். அந்த அனுபவத்தை வார்த்தைகளால் வருணிக்க இயலாது," என்று சிந்துஜா மெய்சிலிர்த்தார்.

இளையர்களுக்குச் சொல்ல விரும்புவது...

"மனம் இருந்தால் எதையும் சாதிக்கலாம்; சவால்களை எதிர்கொள்ளத் துணிச்சல் வேண்டும்; விடாமுயற்சியுடன் இலக்கை நோக்கிச் செயல்படுங்கள்"

"இளையர்களுக்கு வானமே எல்லை" என்று முத்தாய்ப்பாய் முடித்தார் சிந்துஜா.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்