Skip to main content
"வா தோழா வா தமிழா"
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

இளையர் குரல் exclusive

"வா தோழா வா தமிழா" - யோசனைகளை வரவேற்கும் சிங்கப்பூர் தமிழ் இளைஞர் மாநாடு 2024

வாசிப்புநேரம் -
"வா தோழா வா தமிழா" - யோசனைகளை வரவேற்கும்  சிங்கப்பூர் தமிழ் இளைஞர் மாநாடு 2024

NUS தமிழ் பேரவை

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

இந்தத் தலைமுறை எதிர்நோக்கும் சிக்கல்கள் என்னென்ன?

அதற்கான தீர்வுகள் என்ன?

யோசனைகளை முன்வைத்தனர், சிங்கப்பூர் தமிழ் இளைஞர் மாநாட்டின் பங்கேற்பாளர்கள்.

தமிழர் பேரவை (Tamils Representative Council) சிங்கைத் தமிழ்ச் சங்கம் (Singapore Tamil Society), சிண்டா இளையர் மன்றம் (SINDA Youth Club) ஆகியவற்றுடன் இணைந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது NUS தமிழ் பேரவை.

மாணவர்கள் முன்வைக்கும் யோசனைகளை நடைமுறைப்படுத்தும் முயற்சியிலும் அது இறங்கவிருக்கிறது.

16க்கும் 25 வயதுக்கும் இடைப்பட்ட 100க்கும் மேற்பட்ட இளையர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

கருத்தரங்கில் அலசி ஆராயப்படும் 4 கூறுகள்:
  • நல்வாழ்வு
  • தமிழ் கலையும் கலாசாரமும்
  • கல்வி
  • தொழில்நுட்பமும் அதன் தாக்கமும்

மூன்று சுற்றுகளாக நடைபெறும் மாநாட்டின் இறுதி நிகழ்வு ஆகஸ்ட் மூன்றாம் தேதி நடைபெறும்.

சுகாதார அமைச்சு, தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு ஆகியவற்றுக்கான மூத்த துணையமைச்சர் ஜனில் புதுச்சேரி அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ளவிருக்கிறார்.

மாணவர்களின் யோசனைகள் தொகுக்கப்பட்டு அன்றைய தினம் படைக்கப்படும்.

முதன்முறையாகப் போட்டி அம்சத்தையும் அறிமுகப்படுத்தியிருக்கிறது இந்த மாநாடு.

நீதிபதிகளுக்கு முன் தங்களின் யோசனைகளைக் குழுக்கள் முன்வைத்துள்ளனர். சிறந்த குழு ஆகஸ்ட் 3 ஆம் தேதி நடக்கவிருக்கும் இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெறும். குழுக்களின் யோசனைகளுக்கேற்ப பரிசுகள் வழங்கப்படும்.

"மாநாட்டை ஆங்கிலம், தமிழ் இரு மொழிகளிலும் நடத்துகிறோம். இது மேலும் பல மாணவர்களை ஈர்க்கும்; அவர்கள் தமிழ் மொழியின் மீது வைத்துள்ள ஆர்வத்தை வளர்க்கும் என்று நம்புகிறோம்", என்று விளம்பரக் குழுவின் தலைவி மஹிமா கூறினார்.

மாநாடு இளையர்களை வெற்றிகரமாகச் சென்று சேர, "வா தோழா வா தமிழா" என்ற பாடல் ஷபிர் மியுஸிக் ஏஷியாவுடன் (Shabir Music Asia) இணைந்து தயாரிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் தமிழ் இளைஞர் மாநாட்டின் மூலம், இளையர்களிடையே தமிழின் மீது பற்றையும் ஆர்வத்தையும் தூண்ட முடியும் என்று நம்புகிறது NUS தமிழ் பேரவை.

"

"

"

(படங்கள்: NUS தமிழ் பேரவை) 

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்