Skip to main content
'தமிழோடு விளையாடு'
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

இளையர் குரல்

'தமிழோடு விளையாடு' - ஆட்டம் ஆரம்பம்!

வாசிப்புநேரம் -
'தமிழோடு விளையாடு' - ஆட்டம் ஆரம்பம்!

படம்: இம்ரான்

வெளியீடு : 08 Feb 2025 08:33AM புதுப்பிப்பு : 08 Feb 2025 12:10PM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

மீடியாகார்ப் தமிழ்ச் செய்தி, நடப்பு விவகாரப் பிரிவின் 'தமிழோடு விளையாடு' போட்டியின் தகுதிச்சுற்று இன்று நடைபெறவுள்ளது.

St. Gabriel's உயர்நிலைப் பள்ளியில் போட்டி இடம்பெறுகிறது.

இம்முறை 73 பள்ளிகள் அதில் பங்கெடுக்கவிருக்கின்றன.

தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் ஆதரவுடன் போட்டி நடத்தப்படுகிறது.

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் தமிழோடு விளையாடு போட்டி மூன்று சுற்றுகளாக நடத்தப்படும்.

அதனுடைய முதல் சுற்று இன்று.

2017ஆம் ஆண்டில் தொடங்கிய 'தமிழோடு விளையாடு' போட்டியின் 6ஆம் பருவம் இது.

போட்டியில் தொடக்கநிலை 4ஆம், 5ஆம் வகுப்பு மாணவர்கள் கலந்துகொள்வார்கள்.

மாணவர்கள் பிழையின்றித் தமிழில் எழுத ஊக்குவிப்பதும் அவர்களின் சொல்வளத்தைப் பெருக்குவதும் போட்டியின் நோக்கங்கள்.
Related article image
படம்: இம்ரான்
Related article image
படம்: இம்ரான்
Related article image
படம்: இம்ரான்
ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்