சிங்கப்பூரின் முதல் F1 கார்ப்பந்தய ஓட்டுநராக விரும்பும் இளையர்
வாசிப்புநேரம் -
(படம்: CNA)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சிங்கப்பூரில் Formula 1 (F1) சிங்கப்பூர் இரவுநேரக் கார் பந்தயம் இன்று தொடங்கி ஞாயிற்றுக்கிழமை (22 செப்டம்பர்) வரை இடம்பெறும்.
17 வயது சிங்கப்பூரர் கபீர் அனுராக்குக்கு (Kabir Anurag) இந்த மூன்று நாள்கள் மறக்க முடியாததாக இருக்கப்போகின்றன.
F1 பந்தயத் திட்டக் குழுவில் இடம்பெற்றிருக்கும் முதல் சிங்கப்பூரர் என்ற பெருமை அவரைச் சேரும்.
இன்னும் சில ஆண்டுகளில் F1 கார்ப்பந்தயத்தில் போட்டியிடும் ஆற்றல் கபீருக்கு உள்ளது என்று Alpine எனும் தொழில்முறை மோட்டார் விளையாட்டுக் குழு கண்டறிந்துள்ளது.
தற்போது ஐரோப்பாவில் வசிக்கும் கபீர் F1 கார்ப்பந்தயத்தைக் காணச் சிங்கப்பூருக்குத் திரும்பியுள்ளார்.
கபீர் தற்போது Formula 4இல் (F1) போட்டியிடுகிறார்.
Formula 4 முடித்து, Formula 3, Formula 2இல் தேர்ச்சியடைந்த பிறகே ஒருவர் F1இல் போட்டியிட முடியும்.
அதுவும் அவரது வேகத்தைப் பொறுத்திருக்கிறது.
மிகுந்த போட்டித்தன்மை வாய்ந்த நிலையில் 20 இடங்கள் மட்டுமே உள்ளன.
Alpine Academyஇல் சில மாதங்களாகப் பயிற்சிபெற்று வரும் கபீர் பல மடங்கு மேம்பட்டுவந்துள்ளதாகக் கூறினார்.
21 அல்லது 22 வயதில் F1 கார்ப்பந்தயத்தில் போட்டியிட நம்பிக்கை கொண்டுள்ளார் கபீர்.
அவரின் நம்பிக்கை பலித்தால் F1 பந்தய வரலாற்றில் இடம்பெறும் முதல் சிங்கப்பூர் ஓட்டுநராக இருப்பார் கபீர்.