சிங்கப்பூர் சந்திக்கும் சவால்கள் - எதிர்கொள்ள என்னென்ன திறன்கள் தேவை?
வாசிப்புநேரம் -

மாணவர்கள், ஆசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள் என்று பல தரப்பினரும் ஒன்றுகூடி விவாதித்த தலைப்பு இது.
சிங்கப்பூர் தமிழ் இளையர் மன்றம் நான்காம் ஆண்டாக ஏற்பாடு செய்திருந்த தமிழ்மொழி விழா ஆய்வரங்க மாநாட்டில் அந்த விவாதம் இடம்பெற்றது.
சிங்கப்பூர் தமிழ் இளையர் மன்றம் நான்காம் ஆண்டாக ஏற்பாடு செய்திருந்த தமிழ்மொழி விழா ஆய்வரங்க மாநாட்டில் அந்த விவாதம் இடம்பெற்றது.

மாநாட்டில் இவ்வாண்டு 13 முதல் 30 வயதிற்கு உட்பட்ட இளையர்கள் பொதுப்பிரிவு, மாணவர் பிரிவு என்று இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து பன்னிரண்டு சிறு ஆய்வரங்கங்களில் உரையாற்றினர்.
ஆய்வரங்க மாநாட்டின் மூலம் இளையர்களின் பேச்சு, எழுத்துத் திறனை வளர்ப்பது மட்டுமின்றி அவர்களது கண்ணோட்டத்தை சமுதாயத்திற்கு எடுத்துச் செல்லவும் முடியும் என்று நம்புவதாக ஏற்பாட்டாளர்கள் கூறினர்.
ஆய்வரங்க மாநாட்டின் மூலம் இளையர்களின் பேச்சு, எழுத்துத் திறனை வளர்ப்பது மட்டுமின்றி அவர்களது கண்ணோட்டத்தை சமுதாயத்திற்கு எடுத்துச் செல்லவும் முடியும் என்று நம்புவதாக ஏற்பாட்டாளர்கள் கூறினர்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக முனைவர் சித்ரா சங்கரன், ஜூரோங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டான் வூ மெங்க் (Tan Wu Meng) ஆகியோர் கலந்துகொண்டனர்.

பொதுப்பிரிவில் பங்கெடுத்த தமிழாசிரியர்களும், தமிழ் ஆர்வலர்களும் சிங்கப்பூரின் சவால்களை எதிர்கொள்ள நம்பிக்கை, நேர்மறையான சிந்தனைகள், ஆதரவளிக்கும் பெற்றோர் தேவை என்று குறிப்பிட்டனர்.
மாணவர் பிரிவில் பங்கெடுத்தவர்களோ தொழில்திறன்கள், மென்திறன்கள், தலைமைத்துவம் ஆகியவையே அவசியம் என்றனர்.
பங்கேற்பாளர்கள் முன்வைத்த கருத்துகள் பார்வையாளர்களின் மனத்தைக் கவர்ந்தன.
மாணவர் பிரிவில் பங்கெடுத்தவர்களோ தொழில்திறன்கள், மென்திறன்கள், தலைமைத்துவம் ஆகியவையே அவசியம் என்றனர்.
பங்கேற்பாளர்கள் முன்வைத்த கருத்துகள் பார்வையாளர்களின் மனத்தைக் கவர்ந்தன.

இறுதி அங்கமாக நடைபெற்ற பொது அமர்வில் ஒலி 968 கலைஞர்களான திரு காதர், திரு ரவி குணா, வசந்தம் தொலைக்காட்சி பிரபலம் திரு தவனேசன், சமூக வலைத்தளப் பிரபலம் திரு ரித்திக் பாண்டியன் ஆகியோர் பங்குபெற்றனர்.
தமிழ் புழக்கத்தைப் பற்றியும், தமிழ்மொழியை எவ்வாறு வாழும் மொழியாக்கலாம் என்பதைப்பற்றியும் அவர்கள் கலந்துரையாடினர்.
தமிழ் புழக்கத்தைப் பற்றியும், தமிழ்மொழியை எவ்வாறு வாழும் மொழியாக்கலாம் என்பதைப்பற்றியும் அவர்கள் கலந்துரையாடினர்.

அவர்கள் பகிர்ந்துகொண்ட வாழ்க்கை அனுபவங்களும், சிந்தனையைத் தூண்டும் கருத்துகளும் இளையர்களை ஊக்குவிக்கும் வகையில் அமைந்தது.
(படங்கள்: சிட்டாள்)
ஆதாரம் : Mediacorp Seithi