Skip to main content
இளையர்கள் பார்த்து மகிழ்ந்த 'சுவடுகள்'
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

இளையர் குரல் exclusive

இளையர்கள் பார்த்து மகிழ்ந்த 'சுவடுகள்' - 'செய்தி'யின் ஆவணப்படம்

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

செய்தி பற்றிய இளையர்களின் கருத்துகளைச் சேகரிக்க தமிழ்ச் செய்தி, நடப்பு விவகாரப் பிரிவு இளையர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிருக்கிறது.

செய்தியின் 'சுவடுகள்' என்னும் ஆவணப்படத்தைத் திரையிட்டு அதன் ஓர் அங்கமாகக் கலந்துரையாடல் நடத்தப்பட்டது.

தேசிய நூலகத்தின் 'The Pod' வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உயர்கல்வி நிலையங்களைச் சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டனர்.
Related article image
படம்: யாஸ்மின்
தமிழ்ச் செய்தி ஒலி, ஒளிபரப்புத் துறையின் 60 ஆண்டுப் பயணத்தை எடுத்துக்காட்டுகிறது 'சுவடுகள்' எனும் ஆவணப்படம்.

அதில் 'செய்தி'யின் முன்னாள், இந்நாள் தயாரிப்பாளர்கள், செய்தி ஆசிரியர்கள் ஆகியோரின் அனுபவங்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
Related article image
படம்: ரோஸ்
கலந்துரையாடலின்போது இளையர்கள் எந்த விதமான செய்தியை விரும்புகிறார்கள், எந்த பாணியில் செய்தியைப் படிக்க விரும்புகிறார்கள், எந்தத் தளங்களில் செய்தி அவர்களை வந்தடைய விரும்புகிறார்கள் ஆகியவற்றைப் பகிர்ந்தனர்.

'சுவடுகள்' ஆவணப்படம் கடந்த ஜூலை மாதம் 'வசந்தம்' ஒளிவழியில் ஒளிபரப்பப்பட்டது.
ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்