Skip to main content
"உடல் வாழ உயிர்; உயிர் நீளத் தமிழ்"
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

இளையர் குரல்

"உடல் வாழ உயிர்; உயிர் நீளத் தமிழ்" - 'தமிழ்ச்சுடர்' இளம் சாதனையாளர் விருது பெற்ற டாக்டர் மா. பிரெமிக்கா

வாசிப்புநேரம் -
"உடல் வாழ உயிர்; உயிர் நீளத் தமிழ்" - 'தமிழ்ச்சுடர்' இளம் சாதனையாளர் விருது பெற்ற டாக்டர் மா. பிரெமிக்கா

படம்: இம்ரான்

"தமிழ் எனக்கு வெறும் மொழியல்ல. கலாசாரம், அடையாளத்தைத் தெரிந்துகொள்ள உதவும் கருவியாகவும் உள்ளது" என்று கூறுகிறார் டாக்டர் மா. பிரெமிக்கா.

இவருக்கு இளம் சாதனையாளர் விருது வழங்கிக் கௌரவித்தது மீடியாகார்ப் தமிழ்ச் செய்தி, நடப்பு விவகாரப் பிரிவின் 'தமிழ்ச்சுடர் 2025'.

இளம் வயதிலிருந்தே தமிழ்மொழியின் அழகை இலக்கியம் வாயிலாக ரசிக்க ஆரம்பித்ததாகக் கூறுகிறார் பிரெமிக்கா.

அன்றாட மருத்துவ வாழ்க்கையிலும் இயன்றவரை தமிழைப் பயன்படுத்த முயற்சி செய்வதாய் அவர் கூறினார்.

மக்களுக்குத் தேவையான சுகாதாரக் குறிப்புகள், Healthy SG திட்டத்தின்கீழ் வரும் நீரிழிவு போன்ற நாள்பட்ட நோய்கள் குறித்த காணொளிகளைத் தமிழில் மொழிபெயர்க்கவும் உதவியிருப்பதாக டாக்டர் பிரெமிக்கா சொன்னார்.

சிங்கப்பூர்க் கலைக் களஞ்சியத்துக்காக மருத்துவர்கள் ஆற்றிய பங்கை ஆவணப்படுத்த குழுவொன்றையும் இவர் வழிநடத்தினார்.

சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மாநாட்டை நடத்திய அனுபவத்தைக் கொண்டிருக்கும் டாக்டர் பிரெமிக்கா தமிழ்மொழி சமுதாயத்திலிருக்கும் வெவ்வேறு மக்களின் சிந்தனைகளைப் புரிந்துகொள்ளவும் தமக்கு உதவியிருப்பதாகச் சொன்னார்.

தமிழர்கள் தமிழை இயன்றவரை இயல்பாகப் பேச வேண்டும்; இல்லையென்றால் அடுத்த தலைமுறை தமிழைப் பேச வாய்ப்பு இருக்காது என்றும் வலியுறுத்திக் கூறுகிறார் டாக்டர் பிரெமிக்கா.

சிங்கப்பூரில் தமிழுக்காக உழைப்பவர்களைக் கௌரவிக்கிறது 'தமிழ்ச்சுடர்' விருது.
 
ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்