"தமிழில் சரளமாக இருந்தால்தான் தமிழ் சார்ந்த காணொளிகளைத் தயாரிக்கவேண்டும் என்பதில்லை"
மீடியாகார்ப்பின் Pinwheel விருது நிகழ்ச்சியில் உள்ளூர்க் காணொளித் தயாரிப்புக் குழுவான Tanglish Studios விருது வென்றுள்ளது.
கடந்த மாதம் 25ஆம் தேதி நடந்த நிகழ்ச்சியில் அது புதுமுக விருதை வென்றது.
சிங்கப்பூரில் இணைய உள்ளடக்கத் தயாரிப்பாளர்களை அங்கீகரிக்கும் Pinwheel விருது நிகழ்ச்சி 3ஆம் முறையாக நடைபெற்றது.
அதற்கு 564 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
இந்தியர்களுக்கு இடையே இணை தேடும் 'Desi Paktor' நிகழ்ச்சியைத் தயாரித்த Tanglish Studios விருது பெற்றது.
விருது கிடைக்கும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை என்று Tiktok தளத்தில் பகிரப்பட்ட காணொளியில் குழு சொன்னது.
மக்களை எட்டுவதற்கு விடாமல் முயற்சி செய்ததாகவும் பல்வேறு காணொளிகளைத் தயார் செய்ததாகவும் அது கூறியது.
YouTube, TikTok போன்ற தளங்களில் Tanglish Studios தமிழ் சார்ந்த காணொளிகளையும் தயாரிக்கிறது.
அவற்றைத் தயாரிப்பதற்குத் தமிழில் சரளமாக இருப்பது அவசியமில்லை என்றது குழு.
"எங்களால் தமிழில் சரளமாகப் பேசமுடியாது. ஆனால் முயற்சி செய்கிறோம். தமிழில் சரளமாக இருந்தால்தான் தமிழ் சார்ந்த காணொளிகளைப் படைக்கவேண்டும் என்பதில்லை," என்று அது சொன்னது.
தங்களுடைய காணொளியைக் கண்டு மற்ற இளையர்களும் தமிழ்க் காணொளிகளைத் தயாரிக்க முன்வருவார்கள் என்று Tanglish Studios நம்புகிறது.