Skip to main content
தமிழில் யோசி! தமிழில் வாசி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

இளையர் குரல்

தமிழில் யோசி! தமிழில் வாசி - சுற்றுலா வழிகாட்டிகளாய் மாறி வெற்றிபெற்ற மாணவர்கள்!

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

'செய்தி'யின் "தமிழில் யோசி! தமிழில் வாசி!" நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்துள்ளது.

அனைத்து அங்கங்களிலும் மாணவர்கள் உற்சாகத்துடன் கலந்துகொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.

செய்தித்துறையில் மொழிபெயர்ப்பது பற்றி அவர்கள் தெரிந்துகொண்டனர்.

இன்று (19 ஜூலை) நிகழ்ச்சி உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடைபெற்றது.

முதலில் நடத்தப்பட்ட பயிலரங்கில் சிறப்பாகச் செய்த முதல் 20 மாணவர்களுக்குப் போட்டி ஏற்பாடி செய்யப்பட்டது.

இறுதிப் போட்டி

மாணவர்கள் சுற்றுலா வழிகாட்டியாக மாற வேண்டும்.

சிங்கப்பூரில் உள்ள பல்வேறு சுற்றுலாத் தலங்களில் ஏதேனும் ஒன்று அவர்களுக்கு வழங்கப்படும்.

அந்தத் தலத்தைப் பற்றி அவர்கள் தமிழில் 2 நிமிடங்களுக்கு விளக்க வேண்டும்.

அதுவும் மேடையேறி அனைவரின் முன்னிலையில் செய்ய வேண்டும்.

சவாலாக இருந்தாலும் சிறப்பாகச் செய்தனர் மாணவர்கள்!

வெற்றியாளர்கள் யார்யார்?

முதல் பரிசு: ரமேஷ் குமார் ரக்‌ஷரன்

Related article image
2ஆவது பரிசு: நடராஜன் கவிதா அனன்யா
Related article image
3ஆவது பரிசு: அக்‌ஷைனி தனபாலன்
Related article image
4ஆவது பரிசு: முருகன் ருபிகா
Related article image
5ஆவது பரிசு: பாஸ்கரன் யுவராஜ்
Related article image
6ஆவது பரிசு: நாராயணன் யுகா
Related article image
முதல் 6 நிலைகளில் வந்த மாணவர்களுக்கு Grab பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டன.

அதோடு காணொளிகள் எடுப்பது பற்றிய சிறப்புப் பயிலரங்கில் கலந்துகொள்ளும் வாய்ப்பையும் அவர்கள் பெற்றுள்ளனர்.

அந்தப் பயிலரங்கு 'செய்தி' ஏற்பாட்டில் நடைபெறும்.

எஞ்சிய 14 மாணவர்களுக்கு 50 வெள்ளி Grab பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டன.

முதல் 20 நிலைகளில் வந்த மாணவர்கள் அனைவருக்கும் கோப்பை வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள் கட்டுரைகள்