Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

இளையர் குரல் செய்தியில் மட்டும்

"ஒரு துறையிலிருந்து பிடித்த மற்றொரு துறைக்கு மாறுகிறீர்களா? தயக்கம் வேண்டாம்"

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

தந்தைக்கு இதய நோய்...

அவரைக் குணப்படுத்த தகவல்களைத் தேடியபோது மருத்துவத் துறை மீது ஏற்பட்டது ஆர்வம்...

தந்தையின் மறைவுக்குப் பின் மருத்துவப் படிப்பை மேற்கொள்ளும் கனவு கை நழுவிப்போனது.

குடும்பத்தைக் கவனித்துக்கொள்ள வேண்டும்.

மென்பொருள் பொறியாளர் பணியில் சேர்ந்தார்.

இவர் 30 வயது தானியா சட்டோபாத்தியாய். (Tania Chattopadhyay)

7 ஆண்டுகள் ஆஸ்திரேலியாவில் வேலை செய்தார். வேலையில் மனநிறைவு கிடைக்கவில்லை.

மருத்துவப் படிப்பை மேற்கொள்ளவேண்டும்....மனது உறுத்திக்கொண்டே இருந்தது. சென்ற ஆண்டு முடிவெடுத்தார்.

Duke NUS கல்லூரியில் சேர்ந்து படிக்கத் திட்டமிட்டார். கணவர், குடும்பத்தாரின் ஆதரவோடு MCAT தேர்வுக்குத் தயாரானார்.

3 வயது மகனுக்குத் தாயான இவர் குடும்பத்தையும் வேலையையும் கவனித்துக்கொண்டு விடாமுயற்சியுடன் படித்தார்.

சிறப்பாகத் தேர்ச்சி பெற்று Duke NUS கல்லூரியின் உபகாரச் சம்பளத்தைப் பெற்றார்.

எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவின் துணையுடன் மருத்துவப் பரிசோதனைகளின் தரத்தை உயர்த்த விரும்புகிறார் தானியா.

சிக்கலான அறுவை சிகிச்சைகளில் மருத்துவர்களுக்கு ஆலோசனை வழங்கவும் நோயாளிகளுக்குத் தனிப்பட்ட மருத்துவ கவனிப்பை வடிவமைக்கவும் செயற்கை நுண்ணறிவு கைகொடுக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் சொன்னார்.

நீண்டகாலமாக வேறு துறையில் பணியாற்றிவிட்டு பிடித்த துறைக்கு மாற விரும்புவோர் தயக்கத்தைக் கைவிட்டு முழு மனதாக முயற்சி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறார் தானியா.

"ஒரு போதும் கனவைக் கைவிடக்கூடாது" - இவை தானியாவின் நம்பிக்கை வார்த்தைகள்!
ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்