இளையர் குரல் செய்தியில் மட்டும்
"சேலை, அரிசி மாவு, மஞ்சள், குங்குமம்...கலைக் கண்ணோடு பார்க்கலாம்"
வாசிப்புநேரம் -
(படம்: நீவன் பஞ்சுநாதன்)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சேலை, அரிசி மாவு, மஞ்சள், குங்குமம்...
இந்தியப் பாரம்பரியத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பொருள்கள்.
பாரம்பரிய அம்சங்களாக மட்டுமே அவற்றைப் பார்க்காமல் கலைக் கண்ணோடு காண்கிறார் 22 வயது குமாரி திரிஷா செல்வராஜ்.
அவற்றைக் கொண்டு புதுமையான கலைப்படைப்புகளை உருவாக்குகிறார்.
சேலைகளை வைத்து மனித உருவம், புள்ளிக் கோலங்களை மையமாகக்கொண்ட கலைவடிவம், சேலை அணிந்தபடியே படைப்புகளை வடிவமைக்கும் ஆர்வம் என தனித்துவம் பெற்ற கலைஞர்.

Lasalle கலைக் கல்லூரியில் நுண்கலை இளங்கலைப் பட்டம் முடித்தவர்.
அவரைச் சந்தித்தது 'செய்தி'.
சிறு வயது முதல் சேலை, அரிசி மாவு ஆகியவற்றைத் தமது தாயார் அதிகம் பயன்படுத்துவதைப் பார்த்து வளர்ந்தார்.
அதனால் இந்தியப் பாரம்பரிய அம்சங்கள் மீது இயல்பாக ஈர்ப்பு உண்டானது.
தாயாரிடம் கூற விரும்புவதைக் கலைப்படைப்புகளின் வழி வெளிப்படுத்தினால் என்ன என்று தோன்றியது இவருக்கு.
மிகவும் பரிச்சயமான இந்தியக் கலாசாரப் பொருள்கள் அதற்குப் பெரிதும் கைகொடுக்கின்றன எனக் கூறுகிறார் குமாரி திரிஷா.

மற்ற இனத்தைச் சேர்ந்தோர் அவரது கலைப்படைப்புகளைப் புரிந்துகொள்ள சிரமப்படுவதுண்டா என்று கேட்டது 'செய்தி'.
"நமது கலாசாரத்தைப் பற்றி மேலும் புரிந்துகொள்ள ஆர்வமுடையவர்களுக்கு எனது படைப்புகள் நல்ல வாய்ப்பளிக்கின்றன," என்றார்.
ஒவ்வொரு படைப்பையும் உருவாக்கும் முன் இந்தியக் கலாசாரம் பற்றி ஆய்வு செய்கிறார்.
கண்மூடித்தனமாகப் பாரம்பரியங்களைப் பின்பற்றாமல் அவற்றின் முக்கியத்துவத்தை உணர்ந்து கடைப்பிடிக்க அது உதவுவதாக அவர் நம்புகிறார்.
பாரம்பரியத்தை விட்டுவிடக்கூடாது. அதன் மீது ஆர்வம் பெருக வேண்டும். அந்த ஆர்வத்தை இந்திய இளையர்களிடம் தூண்ட தமது படைப்புகள் உந்துதலாய் அமைந்தால் அதுவே தமக்குப் பெருமகிழ்ச்சி என்கிறார் குமாரி திரிஷா.

ஆதாரம் : Mediacorp Seithi