இணையத்தில் இளையர்களைக் கவர்ந்த செய்திகள், காணொளிகள்...தெரியுமா?

Facebook/Squid Game Netflix
இணையத்தில் இளையர்கள் விரும்பிப் படித்த செய்திகள், பார்த்த காணொளிகள் யாவை?
1. 'Squid Games' தொடரின் மூன்றாம் பாகம் விரைவில்...
உலகெங்கும் பிரபலமான தென் கொரிய தொடரான Squid Games அதன் மூன்றாம் பாகத்தை ஜூன் 27ஆம் தேதி வெளியிடவிருக்கிறது.
அதுவே கதையின் இறுதி பாகம். மூன்றாம் பாகத்தையொட்டி வெளியான முன்னோட்டக் காட்சி ரசிகர்கள் பலர், கதை என்ன என்பதை யூகிக்கச் செய்துள்ளது.
2. கும்பமேளாவில் பிரபலமான மோனாலிசாவுக்குத் திரைப்பட வாய்ப்பு...
இந்தியாவில் நடைபெறும் பிரயாக்ராஜ் மகாகும்பமேளாவில் பலரைக் கவர்ந்த ஒரு பெண், திரைப்பட இயக்குநர்களையும் ஈர்த்துள்ளார்.
மோனாலிசா 'The Diary of Manipur' எனும் ஹிந்தித் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
3. இசையமைப்பாளர் தேவாவின் நிகழ்ச்சி
இந்தியாவின் பிரபல இசையமைப்பாளர் தேவா சிங்கப்பூரில் முதல்முறையாக நிகழ்ச்சி நடத்தினார்.
செவ்வாய்க்கிழமை (28 ஜனவரி) நடைபெற்ற நிகழ்ச்சியில் இசையை ரசித்த பலர் சமூக ஊடகங்களில் காணொளிகளைப் பகிர்ந்தனர்.
4. ChatGPTக்குப் போட்டி கொடுக்கும் DeepSeek
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் சீனாவின் புதிய DeepSeek செயலி அமெரிக்காவில் ஆக அதிகமாகப் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகளில் ஒன்றானது.
ChatGPT செயலியைப் பின்னுக்குத் தள்ளிய அது பங்குச் சந்தையை உலுக்கியது.
5. சீன வழக்கங்களுடன் சீனப் புத்தாண்டைக் கொண்டாடிய இந்திய குடும்பம்
இந்திய குடும்பத்தின் ஆரவாரமான சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம் Tiktok தளத்தில் 785,000க்கும் அதிகமான முறை பார்வையிடப்பட்டது.
பல்லினச் சமூகமான சிங்கப்பூரில் பிறரின் கலாசாரத்தை எளிதில் ஏற்றுக்கொண்ட குடும்பம் இணையவாசிகளைக் கவர்ந்தது.