இணையத்தில் இளையர்களைக் கவர்ந்த செய்திகள் - இந்த வாரம்
இந்த வாரம் இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்ட செய்திகள் யாவை..குறிப்பாக இளையர்கள் விரும்பிப் படித்த செய்திகள், பார்த்த காணொளிகள் என்னென்ன?
1. உலகச் சதுரங்க விளையாட்டுப் போட்டியில் வெற்றிபெற்றார் குகேஷ் தொம்மராஜூ
போட்டியில் வெற்றிபெற்ற ஆக இளம் விளையாட்டாளர் எனும் பெருமையும் அவரைச் சேரும்.
2. சிம்பு - யுவன் சங்கர் ராஜா இணைந்து சிங்கப்பூரில் நடத்திய இசை நிகழ்ச்சி
பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் திரைப்பட நடிகர் சிலம்பரசனும் இணைந்து சிங்கப்பூரில் நடத்திய இசை நிகழ்ச்சிக்கு இளையர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்தது. இளையர்கள் அதன் தொடர்பிலான படங்களையும் காணொளிகளையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.
3. இந்தியாவில் உள்ள திரையரங்கில் பெண் மிதிபட்டு மாண்ட வழக்கின் தொடர்பில் 'புஷ்பா 2' திரைப்பட நடிகர் அல்லு அர்ஜூன் கைதுசெய்யப்பட்டார். அவர் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
4. Friday the 13th
13ஆம் தேதி அன்று வெள்ளிக்கிழமை வந்தால், அந்த நாளைப் பலர் துரதிஷ்டமான நாளாகக் கருதுவதுண்டு. இவ்வாண்டின் கடைசி 'Friday the 13th'ஐ ஒட்டிய பகடிப் படங்களை (memes) இளையர்கள் சிலர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.
5. கழக வீட்டுச் சன்னலைத் 'தட்டிய' மலைப்பாம்பு
சிங்கப்பூரில் ஜூரோங் வெஸ்ட்டில் அமைந்துள்ள கழக புளோக்கின் இரண்டாம் தளத்துக்கு ஊர்ந்து சென்ற மலைப்பாம்பு சன்னல் ஒன்றை முட்டியது. அந்தத் தகவலை இளையர்கள் பலர் பகிர்ந்தனர்.
6. பொங்கோல் கோஸ்ட் நிலையம் திறப்பு
வடக்கு-கிழக்கு ரயில் பாதையில் பொங்கோல் கோஸ்ட் ரயில் நிலையம் புதிதாகத் திறக்கப்பட்டது. அதை பற்றிய அனுபவங்களைப் பலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொண்டனர்.