இணையத்தில் இளையர்களைக் கவர்ந்த செய்திகள், காணொளிகள்...
இந்த வாரம் இணையத்தில் இளையர்கள் விரும்பிப் படித்த செய்திகள், பார்த்த காணொளிகள் யாவை?
அவற்றுள் சில....
1. டுர்கேஸ்வரனின் வெற்றிக் கதை
cerebral palsy நோயால் அவதியுறும் டுர்கேஸ்வரன் பல சவால்களைக் கடந்து 'N' நிலைத் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்றார். அவர் பல இளையர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறார்.
2. IB தேர்வுகளில் சிங்கப்பூர் மாணவர்கள் சிறந்த தேர்ச்சி
அனைத்துலக Baccalaureate எனப்படும் IB தேர்வுகளில் சிங்கப்பூர் மாணவர்கள் உலகச் சராசரியைக் காட்டிலும் சிறந்த தேர்ச்சி பெற்றுள்ளனர்.
3. ASEAN கிண்ணக் காற்பந்துப் போட்டி
சிங்கப்பூர் அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளது.
4. நண்பரைக் காப்பாற்றிய 8 வயதுச் சிறுவன்
திராட்சைப் பழம் தொண்டைக்குழியில் மாட்டிக்கொண்டதால் ஐசேயா (Isaiah) மூச்சுவிடச் சிரமப்பட்டார். அருகில் அமர்ந்திருந்த தாமஸ் (Thomas) சரியான நேரத்தில் நண்பருக்கு உதவிக்கரம் நீட்டி அவரது உயிரைக் காப்பாற்றியிருக்கிறார்.
5. "We listen and we don't judge" - சமூக வலைத்தளங்களில் பிரபலமாகும் சவால்
ஒருவர் தாம் இதற்கு முன் செய்த செயலைப் பிறரிடம் சொல்லாமல் இருந்திருக்கலாம். அவர் அது குறித்துப் பகிரும்போது அதனை முழுமனத்தோடு ஏற்றுக்கொண்ட பல இளையர்கள் "We listen and we don't judge" எனும் பெயரில் காணொளிகளை வெளியிடுகின்றனர்.