Skip to main content
இணையத்தில் இளையர்களைக் கவர்ந்த செய்திகள், காணொளிகள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

இளையர் குரல்

இணையத்தில் இளையர்களைக் கவர்ந்த செய்திகள், காணொளிகள்

வாசிப்புநேரம் -
இந்த வாரம் இணையத்தில் இளையர்கள் விரும்பிப் படித்த செய்திகள், பார்த்த காணொளிகள் என்னென்ன தெரியுமா?

வேலை கிடைத்த பட்டதாரிகளின் எண்ணிக்கை குறைந்தது

சென்ற ஆண்டு படிப்பை முடித்தோரில் 87 விழுக்காட்டினருக்கு ஆறு மாதத்துக்குள் வேலை கிடைத்தது. முந்தைய ஆண்டைவிட அது குறைவு.

பட்டதாரிகளுடைய சராசரி மாத வருமானம் கூடியது

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகமும் சிங்கப்பூர்ச் சமூக அறிவியல் பல்கலைக்கழகமும் அவற்றின் பட்டதாரிகளுடைய சராசரி மாத வருமானம் அதிகரித்துள்ளதாகக் கூறின.

இளையர் சாசனம் அறிமுகம்

சமூகத்தில் இளையர்கள் மேலும் துடிப்பாகப் பங்காற்றுவதற்குச் சாசனம் வகைசெய்யும்.

இளையர்கள் வழிநடத்தும் சமூக நடவடிக்கைகளுக்கு நிதியளிக்கப் புதிய SG60 மானியமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

"எனக்கு இதை ஒப்புக்கொள்வதில் வெட்கமில்லை..."

எந்த வயதாய் இருந்தால் என்ன.. விருப்பத்துக்கு ஏற்றவாறு வாழ்வதை ஊக்குவிக்கும் சமூக ஊடகச் சாவல் பிரபலமாகிறது.

தனிநபர்கள் தங்கள் மீதான எதிர்பார்ப்புகளை எவ்வாறு புறக்கணிக்கின்றனர் என்பதைப் பட்டியலிட்டுக் காணொளிகளை வெளியிடுகின்றனர்.

"இன்னும் இளமையான என்னுடன் காப்பி குடித்தேன்..."

சிறு பருவத்தில் இருந்த உங்களை இப்போது நேரில் சந்தித்தால் எப்படி இருக்கும்? காலவோட்டத்தில் ஒருவர் கண்ட மாற்றங்களையும் வளர்ச்சியையும் நினைவுகூரச் செய்கிறது அந்தச் சமூக ஊடகச் சவால்.

இணையவாசிகள் காணொளிகளில் தங்களுடைய படத்தைப் பின்னணியாக வைத்துச் சில மாற்றங்களைப் பட்டியலிடுகின்றனர்.
ஆதாரம் : Mediacorp Seithi

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்