இளையர் குரல் exclusive
"இசையும் மருத்துவமும் எங்கள் இரு கண்கள்"- Duke NUS-இன் முதல் இரட்டையர்கள்
வாசிப்புநேரம் -
படம்: Duke-NUS Medical School
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
தாயின் கருவில் ஒன்றாகத் தொடங்கிய பயணம்....
இசையிலும் இணைபிரியாமல் தொடரும் பயணம்....
இப்போது மருத்துவத் துறையிலும் ஒன்றாகக் காலெடுத்துவைக்கும் இரட்டைச் சகோதரிகள்.
Duke NUS கல்லூரியில் மருத்துவம் பயிலும் முதல் இரட்டையர்கள் என்ற பெருமையைப் பெற்றுள்ளனர் 23 வயதாகும் ஷ்ருதி குமார், ஸ்வாதி குமார் சகோதரிகள்.
கல்லூரியில் சேர எப்போதுமே கடுமையான போட்டி இருக்கும் நிலையில் ஒரே நேரத்தில் இருவருக்கும் இடம் கிடைத்தது இன்ப அதிர்ச்சியாகயிருந்தது என்று 'செய்தி'யிடம் கூறினர்.
அறுவை சிகிச்சை நிபுணர்களாக வேண்டும் என்பது இவர்கள் ஆசை. எதிர்காலத்தில் மனித மூளையைப் பற்றிய மருத்துவ ஆய்வுகளை மேற்கொள்ளும் எண்ணம் உள்ளதாகச் சொல்கின்றனர்.
"உடலின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் உறுப்பாகவும் சிந்தனைகள் உருவாகும் களஞ்சியமாகவும் திகழும் மனித மூளை எவ்வாறு இயங்குகிறது என்பது விந்தையாக உள்ளது; அதை ஆழமாக ஆராய்ந்து புரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறோம்," என்று பகிர்ந்தனர்.
"பார்க்கின்சன்ஸ் நோய்க்கான சிகிச்சையில் இசை பலன் தருகிறது. அதுபோல மற்ற நோய்களைக் குணப்படுத்துவதில் இசையைப் பயன்படுத்தும் சாத்தியம். அது குறித்து ஆய்வு செய்ய எண்ணம் இருக்கிறது," எனக் கூறுகின்றனர் சகோதரிகள்.
"இசையும் மருத்துவமும் எங்கள் இரு கண்கள் போன்றவை; இரு துறைகளிலும் சிறந்து விளங்கத் தொடர்ந்து உழைப்போம்," என்கின்றனர் சாதிக்கத் துடிக்கும் இந்த இரட்டைச் சகோதரிகள்.

ஆதாரம் : Mediacorp Seithi