இளையர் குரல் exclusive
ஆடல், பாடல், குறும்படம் - இளையர்களின் ஆற்றலை உரக்கச் சொல்லும் 'உச்சம் 2024'
This audio is generated by an AI tool.
ஆடல்...பாடல்....குறும்படம்.....
இளையர்கள் தங்களுடைய கலை ஆற்றலை வெளிப்படுத்தத் தளம் அமைத்துக் கொடுத்துள்ளது 'உச்சம் 2024' போட்டி.
சிங்கப்பூர்த் தமிழ் இளையர்கள் மன்றத்தால் ஏற்பாடு செய்யப்படும் போட்டியில் 14 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்ட இளையர்கள் பங்கேற்கின்றனர்.
மொத்தம் 72 பேரிடமிருந்து விண்ணப்பங்கள்...
இன்று (1 செப்டம்பர்) உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடைபெறும் இறுதிச்சுற்றில் 50 பேர் பங்கேற்கின்றனர்.
இளையர்கள் தனிப்பட்ட நபர்களாகவும் குழுக்களாகவும் ஆற்றலை வெளிப்படுத்துகின்றனர்.
3 குறும்படங்கள்...6 பாடல் குழுக்கள்...6 ஆடல் குழுக்கள்...
கடும் போட்டிக்கு இடையே இளையர்கள் ஒன்றிணைய 'உச்சம் 2024' நல்ல தளமாக அமையும் என்று ஏற்பாட்டாளர்கள் நம்புகின்றனர்.
போட்டியை முதல்முறையாக ஏற்பாடு செய்யும் சிங்கப்பூர்த் தமிழ் இளையர்கள் மன்றம், தமிழ் கலாசாரம் நிலைத்திருக்க இளையர்கள் தங்களுடைய ஆற்றலை வெளிப்படுத்தவும் வளர்த்துகொள்ளவும் வாய்ப்பு அளிப்பது முக்கியம் என்று சொன்னது.