Skip to main content
வளரும் கலைஞர்கள் மிளிரும் மேடை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

இளையர் குரல் exclusive

வளரும் கலைஞர்கள் மிளிரும் மேடை - 'உச்சம் 2025'

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

இளையர்களின் கலைத்திறனுக்கு மெருகூட்டும் 'உச்சம் 2025' போட்டி நிகழ்ச்சி இன்று இனிதே நடைபெற்றது.

சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்றம் (STYC) இந்த நிகழ்ச்சிக்கு இரண்டாம் முறையாக ஏற்பாடு செய்தது.

14 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்ட இளையர்கள் போட்டியில் கலந்துகொண்டனர்.
Related article image
படம்: அனு
100க்கும் மேற்பட்ட போட்டியாளர்களில் 47 பேர் மட்டுமே இறுதிச் சுற்றுக்குத் தகுதிப் பெற்றனர்.

அது இன்று உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடந்தது.

3 குறும்படங்கள், 6 பாடல் குழுக்கள், 5 ஆடல் குழுக்கள் என்று போட்டிக் களம் களைகட்டியது.
Related article image
படம்: அனு
Related article image
படம்: அனு
போட்டியாளர்கள் தங்கள் ஆற்றலால் அரங்கை ஆட்கொண்டனர்.

இளையர்கள் இனி தொலைக்காட்சி, சினிமா என்று மென்மேலும் உச்சம் தொடவேண்டும் என்று நடுவர்கள்
ஊக்குவித்தனர்.

இளையர்கள் தன்னம்பிக்கையோடு முன்வந்து கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தவேண்டும் என்று வெற்றியாளர்கள் கூறினர்.
Related article image
படம்: அனு
சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு இளையர்கள் பன்மடங்கு ஆதரவு அளித்ததாக ஏற்பாட்டுக் குழு இன்புற்றது.

இளையர்கள் அச்சமின்றி உச்சம் தொடவேண்டும் என்று ஏற்பாட்டாளர்கள் முழங்கினர்!
ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்