இளையர் குரல் exclusive
விசில்... கைதட்டலுக்கு இடையே மேடையில் மிளிர்ந்த இளையர்கள்
வாசிப்புநேரம் -
படம்: அனு அருணாச்சலம்
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
கலைப்பயணத்திற்கு முடிவில்லை... இளையர்கள் தொடர்ந்து தங்கள் திறனை வளர்த்துக்கொள்ளவேண்டும்!
இதுவே 'உச்சம் 2026' போட்டியாளர்களுக்கு நடுவர்கள் கொடுத்த ஊக்கம்.

இளையர்களின் கலைத்திறனுக்கு மேடை அமைத்துத் தரும் 'உச்சம்' போட்டி நிகழ்ச்சி இன்று உற்சாகமாக நடைபெற்றது.
சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்றம் (STYC) மூன்றாம் முறையாகப் போட்டிக்கு ஏற்பாடு செய்தது.
தகுதிச் சுற்றில் ஏறத்தாழ 170 இளையர்கள் பங்கேற்றனர்.
அவர்களில் சுமார் 50 போட்டியாளர்கள் இன்று இறுதிச் சுற்றில் மேடை ஏறினர்.

நிகழ்ச்சி உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடந்தது.
பாடல், நடனம், குறும்படம் ஆகிய பிரிவுகளில் இளையர்கள் தங்கள் திறனைக் கட்டவிழ்த்தனர்.
அரங்கில் ஆரவாரத்திற்குப் பஞ்சமில்லை.
நான்கு குறும்படங்கள் திரையிடப்பட்டன.
ஆடல், பாடல் பிரிவுகளில் மொத்தம் எட்டு குழுக்கள் பார்வையாளர்களைப் பரவசத்தில் ஆழ்த்தினர்.

திறன்வாய்ந்தவர்களை ஒரே மேடைக்கு அழைத்து வந்த பெருமை சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்றத்தைச் சேரும் என்று நடுவர்கள் சிலாகித்தனர்.
மூவாண்டுகளாக நிகழ்ச்சிக்குப் பேராதரவு கிடைத்ததை எண்ணி ஏற்பாட்டுக் குழு பெருமிதம் கொண்டது.
அடுத்த ஆண்டு நிகழ்ச்சியை மேலும் பிரம்மாண்டமாக நடத்தத் திட்டமிடுவதாகக் குழுவினர் தெரிவித்தனர்.

ஆதாரம் : Mediacorp Seithi