Skip to main content
இளையர்கள் மனம்விட்டுப் பேச ‘U.R.A.I & Beyond’
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

இளையர் குரல்

இளையர்கள் மனம்விட்டுப் பேச ‘U.R.A.I & Beyond’

வாசிப்புநேரம் -
இளையர்கள் மனம்விட்டுப் பேச ‘U.R.A.I & Beyond’

படம்: STYC

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

இளையர்களிடையே அர்த்தமுள்ள உரையாடலுக்கு வழியமைக்க ‘U.R.A.I & Beyond’ என்ற நிகழ்ச்சி நேற்று நடத்தப்பட்டது.

சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்றம் (STYC) நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது.

நியமன நாடாளுமன்ற உறுப்பினர் ஹரேஷ் சிங்கராஜூ சிறப்புப் பேச்சாளராகப் பங்கேற்றார்.
Related article image
படம்: STYC
15 முதல் 35 வயதுடைய இளையர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியின் கருப்பொருள் இளையர்களின் மனநலம்.

மனநலம் பற்றிய விழிப்புணர்வை விரிவுபடுத்துவதுடன் மனநலனைப் பற்றித் தயக்கமின்றி பேசுவதற்கான சூழலை உருவாக்குவது நிகழ்ச்சியின் நோக்கம்.
Related article image
படம்: STYC
இளையர்கள் தங்களின் எதிர்பார்ப்புகள், எதிர்கொள்ளும் சவால்கள் பற்றிப் பகிர்ந்துகொண்டனர்.

தங்களது தனிப்பட்ட அனுபவங்களைப் பற்றிச் சிந்திக்கவும், தயக்கமின்றிக் கேள்விகள் கேட்கவும் நிகழ்ச்சி வாய்ப்பளித்தது.
Related article image
படம்: STYC
Related article image
படம்: STYC
இளையர்கள் பொதுவாக எதிர்கொள்ளும் சவால்களை எப்படிக் சமாளிக்கலாம் என்று கண்டறிய நிகழ்ச்சி உதவியது.
ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்