Skip to main content
"வணிக வேட்டை 2025"
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

இளையர் குரல் செய்தியில் மட்டும்

"வணிக வேட்டை 2025" - இளையர்களை எதிர்காலத் தொழிலதிபர்களாக மாற்ற உதவும் கற்றல் தளம்!

வாசிப்புநேரம் -
தொழில்முனைப்பு என்றால் என்ன?

தொழில்துறையில் சேர விரும்பினால் எந்தெந்தத் திறமைகளை வளர்த்துக்கொள்வது அவசியம்?

உலகளவில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டறிவது எப்படி?

இது போன்ற பல கேள்விகளுக்குப் பதிலளித்தது நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கிய மன்றமும் தமிழர் பேரவை இளையர் பிரிவும் இணைந்து நடத்திய 'வணிகவேட்டை' நிகழ்ச்சி.

3 பயிலரங்குகளுக்குப் பிறகு, நிகழ்ச்சியின் இறுதிச்சுற்று இம்மாதம் மார்ச் 8ஆம் தேதி நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

'இன்றைய உலகில் ஏதாவது ஒரு பிரச்சினையைக் கண்டறிந்து அதற்குத் தொழில்ரீதியாகத் தீர்வைக் கண்டுபிடிப்பது எப்படி?' எனும் கருப்பொருளுக்கு ஏற்ப 9 குழுக்கள் ஆராய்ச்சியை மேற்கொண்டு படைப்புகளைத் தயார்செய்தனர்; பின்னர் அவற்றை நடுவர்களின் முன் படைத்தனர்.

நான்கே நிமிடத்தில் நடுவர்களைக் கவரும் வண்ணம் கருத்துகளை எடுத்துக்கூறி அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு உடனுக்குடன் விடையளிப்பது எளிதான காரியமல்ல.

அச்சவால்களைக் கடந்து போட்டியில் வாகைசூடியது குழு 3.
படம்: சமீர், இந்து
அவர்களுக்கு 2,000 வெள்ளி பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

இரண்டாம் இடத்தைப் பிடித்த குழுவுக்கு 1,500 வெள்ளியும் மூன்றாம் இடத்தைப் பிடித்த குழுவிற்கு 1,000 வெள்ளியும் வழங்கப்பட்டன.
படம்: சமீர், இந்து
படம்: சமீர், இந்து
போட்டியில் தாங்கள் முன்வைக்கும் தீர்வுகளை நடைமுறைப்படுத்தமுடியுமா என்பதை உறுதிசெய்ய பலதரப்பட்ட ஆராய்ச்சி செய்யவேண்டியிருந்ததாகப் பங்கேற்பாளர்கள் சிலர் 'செய்தி'யுடன் பகிர்ந்துகொண்டனர்.

போட்டி இளையர்களை எதிர்காலத் தொழிலதிபர்களாக மாற்றும் கற்றல் தளமாக இருந்தது என்றும் அது வெவ்வேறு துறைகளைச் சார்ந்த தொழிலதிபர்களைச் சந்திக்க நல்ல வாய்ப்பாக அமைந்தது என்றும் அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள் கட்டுரைகள்