Skip to main content
மின்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

இளையர் குரல் exclusive

மின்-சிகரெட்டுப் பிரச்சினையை எதிர்கொள்ள பிள்ளைகளுடன் வெளிப்படையாக பேசுவது அவசியம்: பெற்றோர்

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூரில் இளையர்கள் மின்-சிகரெட்டுகள், Kpods பக்கம் செல்கின்றனர் என்ற அச்சம் அதிகரித்துள்ளது.

கல்வி அமைச்சு மின்சிகரெட்டுகள் பற்றி மாணவர்களுக்கு எடுத்துச் சொல்லும்படி பள்ளிகளைக் கேட்டுக்கொண்டுள்ளது.

பெற்றோரைப் பொறுத்தவரை..

சமூக ஊடகம், சுற்றி இருப்பவர்கள், நண்பர்கள், பள்ளி -இப்படி அவர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் பல அம்சங்கள் உள்ளன.

பிள்ளைகளுடன் வெளிப்படையாகப் பேச வேண்டும், அவர்களைக் கண்காணிக்கவும் வேண்டும் என்றனர் செய்தி-யிடம் பேசிய சில பெற்றோர்.
Related article image
படம்: Envato Elements
"வெளிப்படையாகப் பேசுவதற்கான உறவை வளர்க்கவேண்டும்"

எது நடந்தாலும் தங்களிடம் தயங்காமல் பேசுவதற்கான சூழலை ஏற்படுத்தவேண்டும்..

அப்படிப் பிள்ளைகள் மின்-சிகரெட்டைப் பயன்படுத்துவதற்கான சாத்தியம் இருந்தால் அப்போதே அதைத் தடுத்து நிறுத்தமுடியும் என்றார் 17 வயதுப் பிள்ளைக்குத் தாயான திருமதி பிரபா.

"மின்-சிகரெட் பயன்படுத்துவதை பெருமையாகக் கூறிய ஒரு நண்பனைப் பற்றி என் மகன் அண்மையில் கூறினான். அப்படிப் பேசக்கூடிய ஒருவன் நல்ல நண்பன் இல்லை என்று என்னால் சொல்லமுடிந்தது," என்றார் அவர்.
Related article image
படம்: Envato Elements
"பெற்றோர் பிள்ளைகள் மீது நம்பிக்கை வைக்கவேண்டும்"

சமூக ஊடகத்தில் தீங்கான தகவல் வரலாம்....எனினும் பிள்ளைகள் நல்ல முடிவை எடுப்பார்கள் என்று அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்துள்ளார், இரு பதின்ம வயதுப் பிள்ளைகளுக்குத் தாயான சரஸ்வதி.

"பிள்ளைகளுக்கு முதன்முதலில் கைத்தொலைபேசி கொடுத்தபோது... சோதிக்கமாட்டேன், நீ நல்வழியில் செல்வாய் என்று நம்புகிறேன் என்று சொன்னேன். நான் இப்போதும் அதைக் கடைப்பிடிக்கிறேன்," என்றார், அவர்.

பிள்ளைகளுக்குப் புரிய வைப்பதில் பள்ளிகளின் பங்கு மிக அதிகம் என்றார் சுதா.

"பள்ளியில் ஏற்கெனவே மின்-சிகரெட் பற்றி பாடம் நடத்துகின்றனர். பெற்றோருக்குத் தகுந்த விவரமும் அனுப்பப்படுகிறது. மின்-சிகரெட்டைப் பயன்படுத்துவது தவறு என்று அவர்களும் உணர்ந்துள்ளனர். ஆனாலும் அவ்வப்போது கண்காணிப்பேன்," என்றார் அவர்.
Related article image
படம்: Envato Elements
"கண்காணிப்பு அவசியமாகிறது"

ஆசிரியர்களுடன் தொடர்பில் இருப்பது எல்லா வழிகளிலும் பிள்ளைகளைக் கண்காணிக்க உதவுவதாகக் கூறினார் சரஸ்வதி.

பிள்ளைகள் யாருடன் பழகுகிறார்கள், அவர்களது உடை, மணம், அவர்களது அறை இவற்றைக் கண்காணித்தால் ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்துவிடலாம் என்றார் 14 வயதுப் பிள்ளைக்குத் தாயான பிரியா.

பிள்ளைகள் மீது எவ்வளவு நம்பிக்கை இருந்தாலும் சமூகத்தின் ஏதோ ஓர் அம்சம் அவர்களது மனத்தை மாற்றிவிடலாம் என்ற அச்சம் பொதுவில் பெற்றோரிடையே உள்ளது.
ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்