Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

இளையர் குரல்

இணையத்தில் இளையர்களைக் கவர்ந்த செய்திகள்

வாசிப்புநேரம் -
இணையத்தில் இளையர்களைக் கவர்ந்த செய்திகள்

காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படம்

இந்த வாரம் இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்ட செய்திகள் யாவை? குறிப்பாக இளையர்கள் விரும்பிப் படித்த செய்திகள், பார்த்த காணொளிகள் என்னென்ன? அவற்றுள் சில....

1. அனிருத் ரவிச்சந்தர் சிங்கப்பூரில் நடத்திய இசை நிகழ்ச்சி

பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் சிங்கப்பூரில் நடத்திய இசை நிகழ்ச்சிக்கு இளையர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இசை நிகழ்ச்சி முடிந்தும்கூட இளையர்கள் பலர் அதன் தொடர்பிலான படங்களையும் காணொளிகளையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.
2. சாங்கி விமான நிலையத்தில் அழையா விருந்தாளி

சாங்கி விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தில் குரங்குகள் நுழைந்திருப்பதைக் கண்டு பலரும் வியந்தனர்.
3. ஆர்சனலும் மென்செஸ்ட்டர் யுனைட்டட் அணியும் மோதிய காற்பந்துப் போட்டி

பலரும் எதிர்பார்த்துக் காத்திருந்த காற்பந்துப் போட்டி இது. ஆர்சனல் 2-0 எனும் கோல் கணக்கில் வென்றது.
4. 'புஷ்பா 2' திரைப்படத்தின் விசிறிக்கு நடந்த விபரீதம்

இந்தியாவின் ஹைதராபாத்தில் 'புஷ்பா 2' திரைப்படத்தைக் காணச் சென்ற பெண் கூட்ட நெரிசலில் மிதிபட்டு மாண்டார். சினிமாவுக்காக இப்படியா? என்று இளையர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்