Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

இளையர் குரல்

உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டிகளில் மட்டுமே உள்ள விளையாட்டுகள் யாவை?

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

பாரிஸில் உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன.

உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டிகளில் மட்டுமே உள்ள விளையாட்டுகளில் சிலவற்றைப் பட்டியலிட்டது "செய்தி".

போச்சா (Boccia)
🥇 "boccia" என்பது லத்தீன் மொழியில் "boss" (bottia) என்ற வார்த்தையிலிருந்து உருவானது.
🥇 திடல் உருட்டுப்பந்து போன்ற விளையாட்டு
🥇 Jack எனும் வெள்ளைப் பந்தை நோக்கி நீல அல்லது சிவப்பு நிறப் பந்தை எறிய வேண்டும்
🥇 பெருமூளை வாதம் அல்லது நரம்பியல் குறைபாடு கொண்டவர்களுக்கான விளையாட்டு
🥇 தனிநபராக, ஜோடியாக அல்லது மூவர் கொண்ட குழுவாக இதனை விளையாடலாம்.

கோல்பந்து (Goalball)

🥇 பார்வையற்றோருக்கான விளையாட்டு.
🥇 ஓர் அணியில் மூவர் இருப்பர்.
🥇 மணிகள் கொண்ட பந்தை எதிரணியின் வலைக்குள் கைகளால் தூக்கிப் போடவேண்டும்.
🥇 வழக்கமாகக் கைப்பந்துத் (volleyball) தரையில் இதனை விளையாடுவார்கள்.

பளுதூக்குதல் (Powerlifting)

🥇 மிகப் பிரபலமடைந்துவரும் இந்த விளையாட்டு தற்போது 100 நாடுகளில் உள்ளது.
🥇 உடலில் இடுப்புப் பகுதிக்குமேல் இருக்கும் பலத்தைச் சோதிப்பது இதன் நோக்கம்.
🥇 1984ஆம் ஆண்டு உடற்குறையுடையோர் ஒலிம்பிக்கில் இந்த விளையாட்டு அறிமுகம் கண்டது.

அமர்ந்து விளையாடும் வாலிபால் (sitting volleyball)

🥇 தரையில் அமர்ந்தவாறு விளையாடும் வாலிபால்.
🥇 இது 1956இல் காயப்பட்ட ராணுவ வீரர்களுக்கான மறுவாழ்வு விளையாட்டாகத் தொடங்கப்பட்டது.
🥇 1976 உடற்குறையுடையோர் ஒலிம்பிக்கில் அறிமுகம் கண்டது.
🥇 நரம்பியல் குறைபாடு உள்ளோருக்கான விளையாட்டு.

இப்படி உடற்குறையுள்ளோருக்காக இன்னும் பல விளையாட்டுகளும் உள்ளன.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்