Skip to main content
"காற்பந்தாட்டம் ஆண்களுக்கு மட்டும் தானா? பெண்களுக்கும் தான்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

இளையர் குரல் செய்தியில் மட்டும்

"காற்பந்தாட்டம் ஆண்களுக்கு மட்டும் தானா? பெண்களுக்கும் தான்- சாதிக்கும் துடிப்பு உருவானது"

வாசிப்புநேரம் -
காற்பந்தாட்டம் என்றாலே நினைவுக்கு வருவது ஆண்கள் தான்.

அது ஏன் அப்படி?

பெண்களாலும் சாதிக்கமுடியும் என்று துடிப்புடன் கூறுகிறார், ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியைச் சேர்ந்த ஹரிணி கண்ணன்.

'செய்தி'யிடம் பேசிய அவர், ஆண்களுடன் ஒப்புநோக்க பெண்களுக்குக் காற்பந்து விளையாடப் போதுமான வாய்ப்புகள் கிடைப்பதில்லை என்றார்.

பெண்கள் தாங்களாகவே அந்த வாய்ப்புகளைத் தேடிச் சென்று அமைத்துக்கொள்வது முக்கியம் என்றார் அவர்.

பெண்கள் விளையாடுவதே அரிதாக இருக்கும் காற்பந்தாட்டத்தில்
முழுநேரப் பயிற்றுவிப்பாளர் ஆகவேண்டும் என்பது இவரது கனவு.

தற்போது பிரெஞ்சு காற்பந்துக் கழகத்தில் பகுதிநேரப் பயிற்றுவிப்பாளராக பணிபுரிகிறார் ஹரிணி.

காற்பந்து கற்றுக்கொள்ள துடிப்புடன் இருக்கும் இளம் பெண்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கவேண்டும் என்பது இவரது ஆசை.

அதற்காகவே ஹரிணி விளையாட்டுப் பயிற்சியில் (Sports Coaching) பட்டயப் படிப்பை மேற்கொண்டார்.

விளையாட்டுத்துறையில் சாதிக்கலாம் என்பதை பலமுறை நிரூபித்தும் காட்டியிருக்கிறார்.

இளம் பெண்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் ஹரிணியுடன் ஒரு சந்திப்பு.

மேலும் செய்திகள் கட்டுரைகள்