இளையர் குரல் செய்தியில் மட்டும்
தமிழ் என் அடையாளம் - இளம் மொழிபெயர்ப்பாளர் எல்ஷடாய்
எல்ஷடாய் ஜீவநதி.
முழு நேரச் சமூக சேவை...பகுதி நேரப் படிப்பு.
தமிழ்மொழி மீது தீரா ஆர்வம்.
சற்று வித்தியாசமாக, மொழிபெயர்ப்புச் சேவையில் ஈடுபட்டிருக்கிறார்.
"தமிழ் என் அடையாளம். தாய்மொழியில் சமூக சேவை செய்ய எண்ணினேன். தமிழார்வம் மொழிபெயர்ப்பு மீது ஆர்வம் ஏற்படக் காரணமாக அமைந்தது"
எல்ஷடாய் Fei Yue Community Services சமூக சேவை நிலையத்தில் துணைச் சமூக சேவகர்.
"தமிழ் பேசுவோரிடம் தமிழில் பேசுவது என் கடமை...அது ஒரு வரம்."
இவர் தகவல் மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சின்(MDDI) அரசாங்க மொழிபெயர்ப்புப் பிரிவிலும் சேவையாற்றி வருகிறார்.
முக்கியமான தகவல்கள் சரியான முறையில் மொழிபெயர்க்கப்பட்டு மக்களுக்குச் சென்று சேரவேண்டும்..இதுவே இவரது விருப்பம்.
எல்ஷடாய் இளையர்களுக்குச் சொல்ல விரும்புவது...
"தாய்மொழியை ஒரு தேர்வாகப் பார்க்காமல், மற்றவர் வாழ்க்கையை மாற்றக்கூடிய கருவியாகப் பார்க்கவேண்டும்"
"பேசும் வரை தமிழ் வாழும் மொழியாக இருக்கும். நாம் பேசவில்லையென்றால் யாரும் பேசப்போவதில்லை"