Skip to main content
எடுத்த படங்களில் பிடித்தது
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

இளையர் குரல் செய்தியில் மட்டும்

எடுத்த படங்களில் பிடித்தது

வாசிப்புநேரம் -
நமது மனத்திற்கு நெருக்கமான தருணங்களைப் படம்பிடித்து வைத்திருந்தால்...

தேவைப்படும்போதெல்லாம் அவற்றைத் திரும்பத் திரும்பப் பார்த்து அந்த நினைவை நம் மனத்தில் தக்கவைத்துக்கொள்ளலாம்.

தாங்கள் எடுத்த படங்களில் பிடித்தவற்றைப் பற்றிச் சொல்கின்றனர் இளையர்கள் சிலர்.
 
தாய்க் குரங்கு தன் குட்டியை அணைத்துக்கொண்டிருக்கும் உன்னதக் காட்சி...தாய்க்கும் குழந்தைக்கும் இடையே இருக்கும் அளவுகடந்த அன்பு மனிதர்களுக்கு மட்டுமல்ல...விலங்குகளுக்கும் பொருந்தும்.

-கல்யாணி
வாழ்க்கைக்கும் சிப்ஸுக்கும் ஒற்றுமை உண்டு. சில நேரங்களில் காரம்...சில நேரங்களில் இனிப்பு....நமக்குப் பிடித்தமான சாஸைத் தொட்டுச் சாப்பிட்டால் போதும்; மனத்திற்கு நிறைவாக இருக்கும்!

- நந்தினி
இந்த மலை எப்படி மேகங்களைத் தாண்டி வந்து கண்ணைக் கவரும் வகையில் காட்சியளிக்கிறதோ அப்படித்தான் நாம் வாழ்க்கையில் எதிர்நோக்கும் சவால்களைக் கடந்து மென்மேலும் உயர வேண்டும்.

- வள்ளியப்பன்
வானம் அழகாய்த் தெரியும்போதெல்லாம் மனத்தில் புதிய கனவுகள் பிறக்கின்றன

- மெய்யம்மை
மயிலே! அழகில் உன்னை மிஞ்ச எவரும் இல்லை என்று ஆணவத்தில் கம்பீரமாய் நிற்கிறாயோ? 

- சிட்டாள்
 

மேலும் செய்திகள் கட்டுரைகள்