இணையத்தில் இளையர்களைக் கவர்ந்த செய்திகள்
வாசிப்புநேரம் -

அண்மையில் இணையத்தில் இளையர்கள் விரும்பிப் படித்த செய்திகள், பார்த்த காணொளிகள் யாவை?
அவற்றுள் சில....
1. பிள்ளைகள் மின்-சிகரெட் பிடிப்பதாகப் பெற்றோர் புகார் கொடுத்தால் அபராதம் இல்லை
பிள்ளைகள் மின்-சிகரெட் பிடிப்பது குறித்துப் பெற்றோர் புகார் கொடுத்தால் அபராதம் விதிக்கப்படமாட்டாது என்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
2. Montfort உயர்நிலைப் பள்ளியில் துன்புறுத்தல் சம்பவம் - காணொளியில் இடம்பெற்ற 3 மாணவர்களுக்கும் முறையான தண்டனை கொடுக்கப்படும்
துன்புறுத்தல் சம்பவம் குறித்துப் பரவிய காணொளியில் இடம்பெற்ற 3 மாணவர்களுக்கும் பிரம்படி, தடுத்துவைத்தல், பள்ளிக்கு வருவதைத் தற்காலிகமாகத் தடைசெய்தல் முதலிய தண்டனைகள் கொடுக்கப்படும்.
3. சிறுவர்கள் விளையாட்டாய்ப் பற்ற வைத்த நெருப்பு, மீனவருக்கு $100,000 இழப்பு
சீனாவின் ஜியாங்சு (Jiangsu) மாநிலத்தில் உள்ள யங்செங் (Yancheng) நகரத்தில் மீன் வலைகள் வைக்கப்பட்டிருந்த இடத்தில் பட்டாசுகள் பற்றிக்கொண்டதில் 700க்கும் மேற்பட்ட மீன் வலைகள் சேதமடைந்தன. இந்தச் செய்தி இளையர்கள் மத்தியில் பேசுபொருளானது.
4. 'தமிழோடு விளையாடு 2025' போட்டியின் இறுதிச்சுற்று
மீடியாகார்ப் தமிழ்ச்செய்தி, நடப்பு விவகாரப் பிரிவு ஏற்பாடு செய்த "தமிழோடு விளையாடு" போட்டியின் இறுதிச்சுற்றில் நன் சியாவ் தொடக்கப்பள்ளி வெற்றியைத் தட்டிச்சென்றது.