இணையத்தில் இளையர்களைக் கவர்ந்த செய்திகள், காணொளிகள்...தெரியுமா?
இந்த வாரம் இணையத்தில் இளையர்கள் விரும்பிப் படித்த செய்திகள், பார்த்த காணொளிகளில் சில...
1. 'Squid Games' நாடகத் தொடரின் இரண்டாம் பாகம் வெளியீடு
பிரபலத் தென்கொரிய நாடகத்தொடர் 'Squid Games'இன் இரண்டாம் பாகம் நேற்று (26 டிசம்பர்) Netflixஇல் வெளியானது. 'Squid Games' இளையர்கள் மத்தியில் பரவலாகப் பேசப்படுகிறது.
தொடருக்கு M18 சான்றிதழ் அளிக்கப்பட்டிருக்கிறது.
2. ஆசியான் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் முதல் அரையிறுதிச் சுற்றில் மோதிய சிங்கப்பூர், வியட்நாம்
வியட்நாம் 2-0 எனும் கோல் கணக்கில் சிங்கப்பூரை வென்றது. அது இளையர்கள் மத்தியில் பேசுபொருளானது.
3. சிங்கப்பூரில் BMW காரின் கண்ணாடி மீது ஊர்ந்து சென்ற பாம்பு
இதைப் பற்றி அதிகமான இளையர்கள் வேடிக்கையான கருத்துகளைத் தெரிவித்திருந்தனர்.
4. ஆர்ச்சர்ட் ரோட்டில் 'Yingge' நடனத்தை ஆடி மக்களின் மனத்தில் இடம்பிடித்த 5 வயதுச் சிறுமி
'Yingge' நடனம் சீனாவில் பிரபலமாகக் கருதப்படும் கலைகளில் ஒன்று. அதை ஆடிய சிறுமி இளையர்கள் மனத்தில் இடம்பிடித்தார்.
தென் கொரியாவின் 'Blackpink' இசைக்குழுவைச் சேர்ந்த ரோஸ்ஸும் அமெரிக்க பாடகர் புருனோ மார்ஸும் (Bruno Mars) இணைந்து பாடிய 'APT' பாடலைத் தாய்லந்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் மேடை நிகழ்ச்சியில் பாடியிருக்கிறார். சிறுமி பாடிய வரிகள் தெளிவாக இல்லை என்றாலும் அதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.