இந்த வாரம் இணையத்தில் இளையர் விருப்பம்

இந்த வாரம் இணையத்தில் இளையர்கள் விரும்பிப் படித்த செய்திகள், பார்த்த காணொளிகள் யாவை?
அவற்றுள் சில....
1. 'செய்தி'யின் பொங்கலோ பொங்கல் 2025 போட்டி
மீடியாகார்ப் தமிழ்ச்செய்திப் பிரிவு பொங்கல் திருநாளை ஒட்டித் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்காகப் “பொங்கலோ பொங்கல் 2025” போட்டியை நடத்தியிருந்தது. இன்று சில பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களும் ஆசிரியர்களும் மீடியாகார்ப் வளாகத்திற்கு வந்து பல சுவாரசியமான நடவடிக்கைகளில் கலந்துகொண்டனர்.
2. Instagram Teen Accounts அறிமுகம்
Instagram, சிங்கப்பூரில் Teen Accounts எனும் இளையர் கணக்குகளை அறிமுகம் செய்துள்ளது. 13 வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்ட இளையர்கள் அடுத்த சில மாதங்களில் இளையர் கணக்குகளின்கீழ் வருவர். அது இளையர்கள் மத்தியில் பேசுபொருளானது.
3. மாணவர்கள் பள்ளிகளில் திரையைப் பயன்படுத்துவதற்கான வழிகாட்டி நடைமுறை அறிமுகம்
மாணவர்களின் நலனைக் கருதி அவர்கள் திரையைப் பயன்படுத்துவதற்கான வழிகாட்டி நடைமுறையை அரசாங்கம் அறிமுகம் செய்தது.
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் (NTU) தமிழ் இலக்கிய மன்றம் அதன் வருடாந்திர பொங்கல் நிகழ்ச்சியை நாளை (26 ஜனவரி) நடத்தவிருக்கிறது.
சிங்கப்பூரில் செயற்கை நுண்ணறிவுத் திறனாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகம் (NUS) 4 புதிய பட்டப் பாடங்களை அறிமுகம் செய்துள்ளது.