Skip to main content
இணையத்தில் இளையர்கள் விருப்பம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

இளையர் குரல்

இணையத்தில் இளையர்கள் விருப்பம்

வாசிப்புநேரம் -
இந்த வாரம் இணையத்தில் இளையர்கள் விரும்பிப் படித்த செய்திகள், பார்த்த காணொளிகள் யாவை?

அவற்றுள் சில....

1. A-Level தேர்வு முடிவுகள்

பொதுக்கல்விச் சான்றிதழ் மேல்நிலைத் தேர்வைச் சென்ற ஆண்டு (2024) எழுதிய மாணவர்களில் 94.2 விழுக்காட்டினர் குறைந்தது மூன்று H2 பாடங்களில் தேர்ச்சி பெற்றனர்.

2. மேல்நிலைத் தேர்வு நோக்கிய பயணத்தைக் குறித்து மனந்திறந்து பேசிய மாணவர்கள்

மேல்நிலைத் தேர்வு நோக்கிய பயணம் தங்களது வளர்ச்சிக்குத் துணைபுரிந்ததாக மாணவர்கள் சிலர் 'செய்தி'யுடன் பகிர்ந்துகொண்டனர்.

3. முழுமைத் தற்காப்புப் பயிற்சியின்போது கொடுக்கப்பட்ட உணவைச் சாப்பிட்ட SOTA மாணவர்களுக்கு வயிற்றுக் கோளாறு

முழுமைத் தற்காப்புப் பயிற்சியின்போது கொடுக்கப்பட்ட உணவைச் சாப்பிட்ட SOTA மாணவர்களுக்கு வயிற்றுக் கோளாறு ஏற்பட்டது. அதனையடுத்து உணவு மீள்திறன் தயார்நிலைத்
(Food Resilience Preparedness) திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

4. அன்பளிப்புப் பணத்தை வைத்துக் கட்டுமான ஊழியர்களுக்குப் பானங்களை வாங்கிக்கொடுத்த சிறுவன்

கட்டுமான ஊழியர்களுக்குப் பானங்களை வாங்கிக்கொடுத்த 13 வயதுச் சிறுவனை இணையவாசிகள் பலர் பாராட்டினர்.

5. 'தமிழோடு விளையாடு' போட்டி

மீடியாகார்ப் தமிழ்ச் செய்தி, நடப்பு விவகாரப் பிரிவின் 'தமிழோடு விளையாடு' போட்டியின் இறுதிச்சுற்றுக்கு 6 பள்ளிகள் தகுதிபெற்றன.

6. உடற்பயிற்சிக் கூடத்தில் மெதுவோட்டம் ஓடிய பூனை

சீனாவின் ஷாங்ஹாயில் (Shanghai) உள்ள உடற்பயிற்சிக் கூடத்தில் பூனை ஒன்று மெதுவோட்டம் ஓடியதைக் காட்டும் காணொளி இளையர்கள் மத்தியில் பரவலாகப் பேசப்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்