Skip to main content
இணையத்தில் இளையர்கள் விருப்பம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

இளையர் குரல்

இணையத்தில் இளையர்கள் விருப்பம்

வாசிப்புநேரம் -
இந்த வாரம் இணையத்தில் இளையர்கள் விரும்பிப் படித்த செய்திகள், பார்த்த காணொளிகள் யாவை?

அவற்றுள் சில....

1.Rainforest Wild Asia திறப்பு

சிங்கப்பூரின் புதிய வனவிலங்குப் பூங்கா, Rainforest wild Asia அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டுள்ளது. அதற்கு இளையர்களிடையே நல்ல வரவேற்புக் கிடைத்திருக்கிறது.

2. அம்மாவைப் பற்றிக் காவல்துறையிடம் புகார் செய்த மகன்

தாயார் தமது ஐஸ்கிரீமை எடுத்துச் சாப்பிட்டதை 4 வயது அமெரிக்க சிறுவன் காவல்துறையிடம் புகார் அளித்திருந்தான். அந்தச் செய்தி இளையர்கள் பலருக்கு வேடிக்கையாக இருந்தது.

3. பிள்ளைகளைத் துன்புறுத்திய Kinderland பாலர்பள்ளி முன்னாள் ஆசிரியருக்குச் சிறை

Kinderland பாலர்பள்ளியின் முன்னாள் மாண்டரின் மொழி ஆசிரியர் தமது பொறுப்பில் இருந்த 4 பிள்ளைகளைத் துன்புறுத்தியதற்காக அவருக்கு 17 மாதம், 2 வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்தச் செய்தி இளையர்களிடையே பேசுபொருளானது.

4. பெண்களுடன் சேர்ந்து நடனமாடிய 3 வயதுச் சிறுவன்

சீனாவின் ஃபுஜியான் (Fujian) பகுதியில் பொது இடத்தில் ஆடிக்கொண்டிருந்த பெண்களுடன் சேர்ந்து கால் அசைத்த 3 வயதுச் சிறுவனைக் காட்டும் காணொளி குறிப்பாக இளையர்களிடையே பிரபலமானது.
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்