Skip to main content
இணையத்தில் இளையர்களைக் கவர்ந்த செய்திகள், காணொளிகள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

இளையர் குரல்

இணையத்தில் இளையர்களைக் கவர்ந்த செய்திகள், காணொளிகள்

வாசிப்புநேரம் -
இந்த வாரம் இணையத்தில் இளையர்கள் விரும்பிப் படித்த செய்திகள், பார்த்த காணொளிகள் என்னென்ன தெரியுமா?

லேடி காகா நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு

அமெரிக்கப் பாடகியான லேடி காகா (Lady Gaga) இசைநிகழ்ச்சிக்கு நுழைவுச்சீட்டை வாங்க ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் காத்திருந்தனர்.

சிங்கப்பூரில் மே மாதம் நடக்கவிருக்கும் நிகழ்ச்சிக்குச் சென்ற செவ்வாய்க்கிழமை (18 மார்ச்) முதல் நுழைவுச்சீட்டு விற்பனை நடைபெறுகிறது.

ஜொகூரில் சிங்கப்பூர்ச் சிறுவன் மரணம்

ஜொகூர் பாருவில் காரும் லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் 7 வயதுச் சிங்கப்பூர்ச் சிறுவன் மாண்டான். அந்தச் செய்தி பலருக்கு வேதனையளித்தது.

சிங்கப்பூர்ச் சாலையில் முதலை

சிங்கப்பூரின் லிம் சூ காங் வட்டாரத்தில் உள்ள சாலையில் முதலை ஒன்று காணப்பட்டது.

அது எங்கிருந்து வந்தது எனப் பல இளையர்கள் குழம்பிப் போயினர். அது குறித்து இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டது.

கழிப்பறையைச் சீர்செய்யும்படி மலேசியப் பிரதமரிடம் கேட்ட சிறுவன்

மலேசியப் பிரதமரிடம் சிறுவன் கொடுத்த புகார் ஒன்று இணையவாசிகளைக், குறிப்பாக இளையர்களைச் சிரிக்க வைத்துள்ளது.

பள்ளிக் கழிப்பறைகள் பழுதாகியிருப்பதாகவும் அவற்றைச் சீர்செய்யவேண்டும் என்றும் சிறுவன் புலம்பியதைக் காட்டும் காணொளி பல இளையர்களின் கவனத்தை ஈர்த்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்