Skip to main content
2025 தைப்பூசத் திருவிழா
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

2025 தைப்பூசத் திருவிழா - ஜனவரி 4ஆம் தேதி காவடி தூக்கும் பக்தர்களுக்குச் சிறப்பு விளக்கக் கூட்டம்

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் அடுத்த ஆண்டு (2025) தைப்பூசத் திருவிழா பிப்ரவரி 11ஆம் தேதி செவ்வாய்க்கிழமையன்று கொண்டாடப்படும்.

நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் பிப்ரவரி 10ஆம் தேதி இரவு 11:30 மணியிலிருந்து ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் ஆலயத்திலிருந்து புறப்படவேண்டும்.

அங்கிருந்து ஸ்ரீ தெண்டாயுதபாணி ஆலயத்துக்கு நடந்து பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தவேண்டும்.

பிப்ரவரி 11ஆம் தேதி இரவு 11 மணிக்குள் பக்தர்கள் ஸ்ரீ தெண்டாயுதபாணி ஆலயத்தைச் சென்றடையவேண்டும்.

தைப்பூசத் திருவிழாவைப் பற்றிய தகவல்களை அடுத்த வெள்ளிக்கிழமை (27 டிசம்பர்) முதல் https://thaipusam.sg இணையவாசல் வழி பெற்றுக்கொள்ளலாம்.

நேர்த்திக்கடன் செலுத்த விரும்புவோர் இணையம்வழி பதிவுசெய்யலாம்.

சில தகவல்கள்:

- காவடி தூக்கும் பக்தர்கள் ஜனவரி 4ஆம் தேதி, சனிக்கிழமையன்று காலை 10 மணிக்கு PGP அரங்கில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

- ஜனவரி 5ஆம் தேதி காலை 9 மணி முதல் காவடி தூக்க விரும்புவோர் இணையம் வழி விண்ணப்பம் செய்யலாம்.

- காவடி தூக்குபவர்களுக்கு இசைக் கலைஞர்கள் துணைபுரியலாம்.

- பாடி, வாசிக்க விரும்பும் பஜன், உறுமி மேளக் குழுக்கள், Thaipusam.sg இணையவாசலில் பதிவு செய்யலாம்.

- ஹேஸ்டிங்க்ஸ் (Hastings) ரோடு, சிலிகி (Selegie) ரோடு, ஷோர்ட் ஸ்ட்ரீட் (Short Street), கேத்தே கிரீன் (Cathay Green) ஆகிய இடங்களில் நேரடி இசை வாசிக்கலாம்.

- ஆலயங்களிலும் தைப்பூச ஊர்வலத்திலும் மதுபானம் உட்கொள்வதற்கும் புகைபிடிப்பதற்கும் அனுமதி இல்லை.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்