Skip to main content
மலேசிய காரில் போதைப்பொருள் கடத்தல்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

மலேசிய காரில் போதைப்பொருள் கடத்தல் - இருவர் கைது

வாசிப்புநேரம் -

உட்லண்ட்ஸ் (Woodlands) சோதனைச் சாவடியில் போதைப்பொருள் கடத்த முயன்ற மலேசியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

29 வயது பெண்ணும் 26 வயது ஆடவரும் பயணம் செய்த மலேசியக் காரிலிருந்து சுமார் 261 கிராம் ‘ஐஸ்’, 2,261 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன.

குடிநுழைவுச் சோதனைச்சாவடிகள் ஆணைய அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கு ஏற்ப கார் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

காரின் பின்புறம் மறைத்து வைக்கப்பட்டிருந்த பையில் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.

அதன் மதிப்பு சுமார் 71,000 வெள்ளி.

அது ஒரு வாரத்திற்கு 470 பேர் உட்கொள்ளக்கூடிய அளவு.

விசாரணை நடைபெறுகிறது.

ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்