Skip to main content
ST Engineering நிறுவனத்தின் புதிய விமானப் பராமரிப்பு வளாகம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

ST Engineering நிறுவனத்தின் புதிய விமானப் பராமரிப்பு வளாகம்

வாசிப்புநேரம் -
ST Engineering நிறுவனத்தின் புதிய விமானப் பராமரிப்பு வளாகம்

CNA/Mak Jia Kee

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெளியீடு : 09 Oct 2026 04:12PM புதுப்பிப்பு : 09 Oct 2026 04:13PM

ST Engineering நிறுவனத்தின் புதிய விமானப் பராமரிப்பு, பழுதுபார்ப்பு வளாகத்தில் சுமார் 500 வேலைகள் உருவாக்கப்படும். 

170 மில்லியன் வெள்ளி செலவில் கட்டப்பட்ட Changi Creek வளாகம் அதன் செயல்பாடுகளைக் கடந்த மே மாதம் தொடங்கியது.

அது இன்று அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.

ST Engineering நிறுவனத்தின் 4ஆவது விமானப் பராமரிப்பு, பழுதுபார்ப்பு வளாகம் அது.

வளாகத்தில் செயல்பாடுகள் கட்டங்கட்டமாக அதிகரிக்கப்படுகின்றன.

அதில் பெரும்பாலான வேலைகள் புதிதாக உருவாக்கப்படும்.

உரிமம் பெற்ற விமானப் பொறியாளர்கள், திட்டமிடல் உற்பத்திக் கட்டுப்பாட்டு நிபுணர்கள், இயந்திரப் பழுதுபார்ப்பு நிபுணர்கள் போன்ற வேலைகள் வழங்கப்படும்.

அந்த வளாகத்தில் செயல்முறைகளுக்கு ஆதரவாக ஆளில்லா வானூர்திகள், தானியக்க இயந்திர மனிதக் கருவிகள் பயன்படுத்தப்படும்.

சாங்கி விமான நிலையத்தில் 5ஆம் முனையம் கட்டப்படுகிறது... ஆசிய பசிபிக்கில் விமானப் போக்குவரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் புதிய விமானப் பராமரிப்பு, பழுதுபார்ப்பு வளாகம் மீதான முதலீடு சரியான நேரத்தில் செய்யப்படுவதாகத் துணைப்பிரதமர் கான் கிம் யொங் கூறினார்.

ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்