Skip to main content
Autism உள்ள பிள்ளைகளுக்கு இயற்கை சார்ந்த விளையாட்டுகளின் நன்மை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

Autism உள்ள பிள்ளைகளுக்கு இயற்கை சார்ந்த விளையாட்டுகளின் நன்மை

வாசிப்புநேரம் -
Autism உள்ள பிள்ளைகளுக்கு இயற்கை சார்ந்த விளையாட்டுகளின் நன்மை

படம்: NParks இணையத்தளம்

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

இயற்கை சார்ந்த விளையாட்டுகளில் ஈடுபடும் தொடர்புத் திறன் குறைபாடு (autism) உள்ள பிள்ளைகளிடம் திடீர் உணர்ச்சி வெளிப்பாடுகள் குறைந்திருப்பதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. 

இலைகள், மரக்கிளைகள், கற்கள் போன்றவற்றைச் சேகரிப்பது, குழு நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஆகியவை அந்த விளையாட்டுகளில் அடங்கும். 

இதுபோன்ற விளையாட்டுகளால் பிள்ளைகள் பிறருடன் பொருள்களைப் பகிர்ந்துகொள்வதிலும் பழகுவதிலும் அதிக ஆர்வம் காட்டுவதாகத் தெரிவிக்கப்பட்டது. 

இந்த ஆய்வு மூன்று ஆண்டாக நடத்தப்பட்டது.

அதன்வழி வழிகாட்டி ஒன்று உருவானது. 

ஆறு வாரத் திட்டம் முடிவடைந்த பின்னர் பிள்ளைகளால் தங்களது உணர்ச்சிகளை இன்னும் திறம்படக் கட்டுப்படுத்திக்கொள்ள முடிகிறது; 

தங்களது எண்ணங்களை வெளிப்படுத்த முடிகிறது என்பது தெரியவந்தது. 

இந்த வழிகாட்டி மருத்துவ நிலையங்களில் மட்டுமின்றி அன்றாட வாழ்க்கையிலும் பயனளிக்கும் என்று தொழில் சிகிச்சை நிபுணர்கள் கூறுகின்றனர். 

இயற்கை சார்ந்த விளையாட்டு, சிகிச்சைக்கு மாற்றாக அமையாது. இருப்பினும், அது கூடுதல் உதவியாக அமையும்.

இந்த வழிகாட்டியை இன்னும் அதிகம் பயன்படுத்துவதற்குச் சிங்கப்பூர் தொழில் சிகிச்சை நிபுணர் சங்கத்துடனும் இணைந்து செயல்படத் திட்டம் உள்ளது.

ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்