இந்திய மாநிலங்களுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு அழைப்பு
வாசிப்புநேரம் -
படம்: Singapore Business Federation website
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
எரிசக்தி, வர்த்தக, தொழில் துணையமைச்சர் கான் சியோ ஹுவாங் (Gan Siow Huang) இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
முதன்முறையாக நடைபெறும் சிங்கப்பூர் - இந்தியா வளர்ச்சி கருத்தரங்கில் அவர் பேசினார்.
நிறுவனங்கள் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்தின் முக்கியத்துவம், பலம் ஆகியவற்றை அறிந்து செயல்பட வேண்டும் என்றார் அவர்.
சட்டீஸ்கர் (Chhattisgarh), ஹரியானா (Haryana) ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்கள் கருத்தரங்கில் கலந்துகொண்டனர்.
சிங்கப்பூர் நிறுவனங்கள் ஏற்கனவே நடப்பில் இருக்கும் இருதரப்புக் கட்டமைப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறும் திருவாட்டி கான் கூறினார்.
இருதரப்புக்கும் நன்மை அளிக்கும் வகையில் வர்த்தக உறவு அமைந்திருக்க வேண்டும்.
சிங்கப்பூர் நிறுவனங்கள் இந்தியாவில் கால்பதிப்பதோடு, அங்குள்ள நிறுவனங்களுக்கு சிங்கப்பூரில் வாய்ப்புகளை உருவாக்குவதும் முக்கியம் என்றார் அமைச்சர் கான்.

ஆதாரம் : Mediacorp Seithi