Skip to main content
விநியோக ஓட்டுநராகப் பணியாற்றிய 3 வெளிநாட்டினர் கைது
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

விநியோக ஓட்டுநராகப் பணியாற்றிய 3 வெளிநாட்டினர் கைது

வாசிப்புநேரம் -
விநியோக ஓட்டுநர்களாகச் சட்டவிரோதமாகப் பணியாற்றிய சந்தேகத்தில் வெளிநாட்டினர் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய விநியோக ஓட்டுநர்கள் அமைப்பு அளித்த புகார்களை அடுத்து தீவு முழுவதும் சோதனைகள் நடத்தப்பட்டதாக மனிதவள மூத்த துணை அமைச்சர் கோ போ கூன் (Koh Poh Koon) கூறினார்.

அது போன்ற சோதனைகள் தொடர்ந்து நடத்தப்படும் என்று அவர் சொன்னார்.

மனிதவள அமைச்சின் நடவடிக்கையின்போது சுமார் 375 ஓட்டுநர்கள் சோதிக்கப்பட்டனர்.

அவர்களில் வெளிநாட்டினர் மூவர் கைதாகினர்.

அவர்கள் விசாரிக்கப்படுகின்றனர்.

மூவரும் சட்டவிரோதமாக விநியோக ஓட்டுநர் வேலையைச் செய்ய உதவிய உள்ளூர்வாசிகளையும் அமைச்சு விசாரிக்கிறது.

சிங்கப்பூரில் வெளிநாட்டினர் சட்டவிரோதமாக விநியோக ஓட்டுநராகப் பணிபுரிவதால் உள்ளுர் ஓட்டுநர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

அதை எப்படி கையாள்வது என்பது குறித்து இணையத்தளச் சேவை ஊழியர்கள் முத்தரப்புக் குழு ஆராய்ந்து வருகிறது.

வேலை அனுமதியின்றி சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டவருக்கு 20,000 வெள்ளி வரை அபராதம் அல்லது 2 ஆண்டு வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

அவர்கள் சிங்கப்பூரில் வேலை செய்ய நிரந்தரமாகத் தடை செய்யப்படும்.

அவர்கள் சட்டவிரோதமாக வேலை செய்ய உதவும் சிங்கப்பூரர்களுக்கும் தண்டனை விதிக்கப்படும்.
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்