Skip to main content
பயங்கரவாதத்துக்கு எதிரான பாவனைப் பயிற்சி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

பயங்கரவாதத்துக்கு எதிரான பாவனைப் பயிற்சி - Esplanadeஇல்...

வாசிப்புநேரம் -
பயங்கரவாதத்துக்கு எதிரான பாவனைப் பயிற்சி - Esplanadeஇல்...

(படம்: CNA/Alyssa Tan)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

பயங்கரவாதத்துக்கு எதிரான தயார்நிலையைச் சோதிக்கும் பாவனைப் பயிற்சி இன்று காலை Esplanade - Theatres on the Bay பகுதியில் நடத்தப்பட்டது.

அந்தப் பகுதியில் 10 ஆண்டுக்குப் பிறகு மீண்டும் அத்தகைய பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.

Exercise Heartbeat என்று அழைக்கப்படும் அந்த பயிற்சியைச் சிங்கப்பூர் காவல் படையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் இணைந்து வழிநடத்தின.

115க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அதில் ஈடுபட்டனர்.

இம்முறை ஆளில்லா வானூர்தித் தாக்குதலையும் ஆயுதமேந்திய தீவிரவாதிகளையும் அதிகாரிகள் எதிர்கொண்டனர்.

ஆளில்லா வானூர்தி இரு வெடிகுண்டுகளை உடற்பயிற்சி வகுப்புக்கு அருகே போட்டது.

சில நொடிகளில் தாக்குதல்காரர் கத்தியுடன் தாக்குவதுபோல் பாவனை செய்தார்.

மக்கள் அதிகம் கூடும் பரந்த பொது இடங்களைப் பாதுகாக்கும் முக்கியத்துவம் பயிற்சியின்போது வலியுறுத்தப்பட்டது.

சட்ட அமைச்சரும் உள்துறைக்கான துணையமைச்சருமான திரு எட்வின் தோங் (Edwin Tong) பயிற்சியைப் பார்வையிட்டார்.

ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்