பொதுத்தேர்தல் 2025: மக்கள் செயல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியவர்கள்?

(படம்: PAP)
மக்கள் செயல் கட்சியின் 20 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரும் தேர்தலில் களமிறங்கவில்லை.
அவர்களில் கால்வாசிப்பேர் ஒரு தவணை மட்டுமே சேவையாற்றியவர்கள்.
2015 பொதுத்தேர்தலின்போது 14 பேர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகினர்.
2020இல் அவ்வெண்ணிக்கை 20ஆகப் பதிவானது.
2025இல் ஒரு தவணை, 2 தவணை, 4 தவணை எனப் பல்வேறு காலக்கட்டங்களுக்குப் பணியாற்றியாற்றியவர்கள் பதவி விலகினர்.
அவர்களில் சிலர்:
மூத்த அமைச்சர் தியோ சீ ஹியென் (Teo Chee Hean)
- நீண்ட காலம் சேவையாற்றியவர்.
- 1992இல் அரசியலுக்கு வந்தார்.
- 1997ஆம் ஆண்டு முதல் பாசிர் ரிஸ் - பொங்கோல் குழுத்தொகுதியில் இருந்தார்.
- தொகுதியைப் பிரதிநிதிக்க 6 முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.
முன்னாள் துணைப்பிரதமர் ஹெங் சுவீட் கியெட் (Heng Swee Keat)
- 2011இல் அரசியலுக்கு வந்தார்.
- தெம்பனிஸ் குழுத்தொகுதியைச் சேர்ந்தவர்.
- 3 தவணை நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார்.
முன்னாள் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் (Ng Eng Hen)
- அரசியலிருந்து ஓய்வுபெறுவதாக ஏப்ரல் 18ஆம் தேதி அறிவித்தார்.
- 2006 ஆம் ஆண்டு முதல் 5 தவணைகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர்.
ஒரு தவணைக்குப் பிறகு பதவி விலகியவர்கள்?
- கேரி டான் (Carrie Tan)
நீ சூன் (Nee Soon) குழுத்தொகுதி
- டெரிக் கோ (Derrick Goh)
நீ சூன் (Nee Soon) குழுத்தொகுதி
- டான் வீ (Don Wee)
சுவா சூ காங் (Chua Chu Kang) குழுத்தொகுதி
- முகமது ஃபாமி பின் அலிமான் (Mohd Fahmi Aliman)
மரீன் பரேட் (Marine Parade) குழுத்தொகுதி
- இங் லிங் லிங் (Ng Ling Ling)
அங் மோ கியோ (Ang Mo Kio) குழுத்தொகுதி