முதல் வேலை, அரசாங்க உதவி தேவை: அதிபர் தர்மன்
வாசிப்புநேரம் -
படம்: Reuters
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
புதிதாய்ப் பட்டம் பெற்றவர்கள் தங்களது முதல் வேலையைப் பெறுவதற்கு அரசாங்கங்கள் உதவ வேண்டியிருக்கலாம் என்று அதிபர் தர்மன் சண்முகரத்னம் கூறியிருக்கிறார்.
செயற்கை நுண்ணறிவால் (AI) தொடக்கநிலை ஊழியர்களுக்கான தேவை மாறி வரும் வேளையில் இது அவசியமாகிறது என்றார் அவர்.
வேலைவாய்ப்பில் முதல் அடியை எடுத்து வைக்கமுடியாமல் போனால் இளையர்கள் தங்கள் எதிர்காலத்தின் மீதுள்ள நம்பிக்கையை இழக்கலாம் என்று அதிபர் தர்மன் சொன்னார்.
இளையர்கள் தங்களது முதல் வேலையைப் பெறுவதற்கு அரசாங்கம் தனியார்த்துறையுடன் இணைந்து பணியாற்றவேண்டும் என்றார் அவர்.
திரு தர்மன் பேங்காக்கில் நடைபெறும் உலக வங்கி நிகழ்ச்சியில் பேசினார்.
AI வேலைகளைப் பாதித்தாலும் உற்பத்தித் துறை, பசுமை எரிசக்தி, சுகாதாரப் பராமரிப்பு ஆகியவற்றில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

ஆதாரம் : Mediacorp Seithi