Skip to main content
சுமார் 12,800 சிகரெட் பெட்டிகள் லாரியில்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சுமார் 12,800 சிகரெட் பெட்டிகள் லாரியில்

வாசிப்புநேரம் -
சுமார் 12,800 சிகரெட் பெட்டிகள் லாரியில்

(படம்: Envato Elements)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

துவாஸ் சோதனைச் சாவடியில் தீர்வை செலுத்தப்படாத சிகரெட்டுகள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட ஒரு லாரியில் அவை பதுக்கி வைக்கப்பட்டிருந்தன.

ஜூலை 22ஆம் தேதி சிங்கப்பூருக்குள் நுழைய முயன்றது லாரி.

அதில் சுமார் 12,800 சிகரெட்டு பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

லாரியில் இரும்புப் பெட்டிகளுள் மரப்பெட்டிகள் மறைக்கப்பட்டிருந்தன.
அந்த மரப்பெட்டிகளில் சிகரெட்டுகள் ஒளித்து வைக்கப்பட்டன.

அது குறித்து குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் இன்று (ஜூலை 30) அதன் Facebook பக்கத்தில் பதிவு வெளியிட்டது.

31 வயது மலேசிய ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

சிங்கப்பூர் சுங்கத்துறை விசாரணை நடத்துகிறது.
ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்