Skip to main content
"Lawrence Boy!"
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

"Lawrence Boy!" - பிரதமர் வோங்கைச் செல்லமாக அழைத்த பாட்டி

வாசிப்புநேரம் -
"Lawrence Boy!" - பிரதமர் வோங்கைச் செல்லமாக அழைத்த பாட்டி

படம்: IG/lawrencewongst

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

பிரதமர் லாரன்ஸ் வோங் (Lawrence Wong) ஓர் இனிமையான சந்திப்பின் காணொளியைப் பகிர்ந்துள்ளார்.

மரீன் டெர்ரஸ் (Maring Terracre) பகுதிக்கு மக்களைச் சந்திக்கச் சென்றிருந்தார்.

அப்போது ஒரு 89 வயது பாட்டி அவரை "Lawrence Boy" என்று செல்லமாக அழைத்தார்.

திரு வோங் சிறுவயதில் ஹெயிக் (Haig) சிறுவர் தொடக்கப்பள்ளியில் பயின்ற போது அந்தப் பாட்டி அங்கு அலுவலராக வேலை செய்தவர்.

அவர் தமது பெயர் மேரி (Mary) என்று சொல்லி அறிமுகம் செய்துகொண்டார்.

பல ஆண்டுகள் ஆனாலும் திரு வோங் மறக்கவில்லை. உடனடியாக அவரை நினைவுகூர்ந்தார்.

"பள்ளி முதல்வர் திரு சோவுடன் (Soh) பணியாற்றியவர் தானே நீங்கள்," என்று திரு வோங் கூறினார்.

ஆம் என்று கூறிய மூதாட்டி, திரு வோங்கிடம் அவரது தாயாரைக் கேட்டதாகச் சொல்லும்படி கூறினார்.

சிறுவயதிலிருந்து இப்போது வரை திரு வோங்கைப் பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

சந்திப்பு மனதை நெகிழ வைப்பதாக இணையவாசிகள் பலரும் கருத்துத் தெரிவித்தனர்.
ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்