Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

குழந்தையை அடித்துக் கடித்துத் துன்புறுத்தியதை ஒப்புக்கொண்ட பணிப்பெண்

வாசிப்புநேரம் -
குழந்தையை அடித்துக் கடித்துத் துன்புறுத்தியதை ஒப்புக்கொண்ட பணிப்பெண்
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூரில் ஆண் குழந்தையைப் பலமுறை துன்புறுத்திய பணிப்பெண் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

அந்த 24 வயதுப் பெண் மியன்மாரைச் சேர்ந்தவர். 

அவர் குழந்தையோடு தனி அறையில் தங்கினார்.

இந்த ஆண்டு ஏப்ரலில் பணிப்பெண் குழந்தையைத் துன்புறுத்தியதாகத் தெரிகிறது. 

பலமாக உலுக்குவது, அடிப்பது, கடிப்பது என்று அவர் பலமுறை குழந்தையைத் துன்புறுத்தினார்.

பெரும்பாலான சம்பவங்கள் நள்ளிரவுக்குப் பிறகு நடந்தன.

குழந்தை பிறந்து கிட்டத்தட்ட ஆறு மாதமே ஆகியிருந்தது.

குழந்தையின் தாயார் கண்காணிப்புக் கேமராப் பதிவுகளைப் பார்த்தபோது துன்புறுத்தல் பற்றித் தெரியவந்தது. 

தந்தை காவல்துறையில் புகார் அளித்தார்.

மறுநாள் KK மகளிர், சிறார் மருத்துவமனையில் குழந்தை பரிசோதிக்கப்பட்டது.

பணிப்பெண் குற்றத்தை ஒப்புக்கொண்டார். 

அவருக்கு 24 முதல் 30 மாதச் சிறைத்தண்டனை விதிக்க அரசுத்தரப்பு கோரியுள்ளது.

வழக்கு ஜனவரி மாதத்திற்குத் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அப்போது தண்டனை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்