Skip to main content
சாங்கி விமான நிலையத்தில் அடுத்தடுத்து திருட்டு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சாங்கி விமான நிலையத்தில் அடுத்தடுத்து திருட்டு - அமெரிக்க ஆடவர் கைது

வாசிப்புநேரம் -
சாங்கி விமான நிலையத்தில் அடுத்தடுத்து திருட்டு - அமெரிக்க ஆடவர் கைது

படம்: CNA/Alyssa Tan

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சாங்கி விமான நிலையத்தில் வாசனைத் திரவியங்களைத் திருடியதன் தொடர்பில் 47 வயது அமெரிக்க ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான நிலையத்தில் மூன்றாம் முனையத்தின் இடைவழிப் பயணப் பகுதியில் திருட்டு நடந்தது.

அங்குள்ள கடையில் வைக்கப்பட்டிருந்த வாசனைத் திரவியங்கள் மாயமாகின.

கடந்த ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி காவல்துறைக்குப் புகார் கிடைத்தது.

ஆடவர் சுமார் 330 வெள்ளி மதிப்புள்ள வாசனைத் திரவியத்தைத் திருடியது கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியிருந்தது.

கூடுதல் விசாரணை நடத்தியபோது அவர் அதே நாளில் இரண்டாம் முனையத்தின் இடைவழிப் பயணப் பகுதியிலும் திருடியது தெரியவந்தது.

ஆடவர் இரண்டு கடைகளிலிருந்து சுமார் 650 மதிப்புள்ள வாசனைத் திரவியங்களை எடுத்துச்சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

அதிகாரிகள் ஆடவரை அடையாளம் கண்டனர். ஆனால் அப்போது அவர் சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டுவிட்டார்.

இந்த ஆண்டு ஏப்ரலில் அவர் மீண்டும் சிங்கப்பூருக்கு வந்தபோது மேலும் சில வாசனைத் திரவியங்களைத் திருடியதாகச் சொல்லப்பட்டது.

அதன்பிறகும் அவர் சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டுவிட்டார்.

ஆடவர் மொத்தம் ஆறு வாசனைத் திரவியங்களைத் திருடியதாகத் தெரிகிறது.

அவற்றின் மதிப்பு கிட்டத்தட்ட 1,410 வெள்ளி.

கடந்த மாதம் 25ஆம் தேதி ஆடவர் சாங்கி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

அவர் மீது நாளை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும்.
 
ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்