Skip to main content
கையில் ஒட்டிய முத்திரையைப் பயன்படுத்திப் பணம் பெற்றாரா?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

கையில் ஒட்டிய முத்திரையைப் பயன்படுத்திப் பணம் பெற்றாரா?

வாசிப்புநேரம் -
கையில் ஒட்டிய முத்திரையைப் பயன்படுத்திப் பணம் பெற்றாரா?

(படம்: Facebook/Complaint Singapore (Anonymous))

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூரில் ஆடவர் ஒருவர் கையில் ஒட்டியிருந்த முத்திரை வில்லையைப் பயன்படுத்தித் தகுதியற்ற பானக் கலன்களுக்கான பணத்தைத் திரும்பப் பெற்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

சம்பவத்தைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

நவம்பர் 22ஆம் தேதி இரவு சுமார் 9.50 மணிக்குச் சம்பவம் நடந்ததாக 'Complaint Singapore Unrestricted' Facebook பக்கம் தெரிவித்தது.

காணொளியில் உள்ள ஆடவரின் இடது ஆள்காட்டி விரலில் முத்திரை வில்லை போன்ற ஒன்று ஒட்டப்பட்டிருந்தது.

தகுதியற்ற கலன்களுக்கு விரலில் ஒட்டியிருந்த முத்திரையைப் பயன்படுத்தியது போலக் காணப்பட்டது.

சம்பவம் குறித்து இணையவாசிகள் பலரும் கேள்வி எழுப்பினர்.

பானக்கலன்களைத் திரும்பப் பெறும் இயந்திரங்களை முறைகேடாகப் பயன்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று BCRS நிறுவனம் தெரிவித்துள்ளது.

அனைத்து இயந்திரங்களிலும் மின்னிலக்கப் பரிவர்த்தனைப் பதிவுகள், 24 மணி நேரக் கண்காணிப்புக் கேமராக்கள், மோசடிகளைக் கண்டறியும் தொழில்நுட்பம் ஆகியவை இருப்பதாக அது கூறியது.

மோசடி கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட தகவல்கள் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவித்தது.

வைப்புத்தொகை முத்திரை உள்ள பானக் கலன்களுக்கு மட்டுமே பணத்தைத் திரும்பப் பெற முடியும் என்று தேசியச் சுற்றுப்புற அமைப்பு நினைவூட்டியது.

திட்டத்தின் நம்பகத்தன்மையைப் பாதுகாக்கக் கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆதாரம் : 8world

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்