"வேலையிடப் பாதுகாப்பு நடைமுறைகளை மறுஆய்வு செய்க" - நிறுவனங்களுக்கு மனிதவள அமைச்சு வேண்டுகோள்
வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
மனித வள அமைச்சு, கட்டுமானம், போக்குவரத்து, சேமிப்பகம் ஆகிய துறைகளில் உள்ள நிறுவனங்கள் தாமாகவே முன்வந்து பாதுகாப்பு நடைமுறைகளை மறு ஆய்வு செய்யும்படி கேட்டுக் கொண்டுள்ளது.
இன்று தொடங்கி வரும் 18ஆம் தேதி வரை அவை அதைச் செய்யலாம்.
கடந்த மாதம் வேலையிட விபத்துகளில் 7 பேர் மாண்டதால் அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கான்கிரீட் குழாய்களைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவது, வாகனங்கள் தவறுதலாக உருண்டு செல்வதைத் தடுப்பது உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
அடுத்த மாதம் 4ஆம் தேதியிலிருந்து
மனிதவள அமைச்சு பாதுகாப்பு நடைமுறைகளை மேலும் கடுமையாக்கவிருக்கிறது.
முதன் முறை குற்றம் புரிவோருக்கான அபராதத்தை ஆயிரம் வெள்ளிக்கு உயர்த்துவது, 5 வாரத்துக்குப் பதிலாக 8 வாரம் வேலையை நிறுத்திவைக்க உத்தரவிடுவது, மிக மோசமான விபத்துகள் நேர்ந்தால் வேலைக்குப் புதிதாக ஆள் சேர்ப்பதை 3 வாரம் நிறுத்திவைப்பது ஆகியவை அவற்றில் அடங்கும்.

ஆதாரம் : CNA